வரும் 21ம் தேதி முதல் தொடங்கும் பேருந்து சேவை!

வரும் 21ம் தேதி முதல் தொடங்கும் பேருந்து சேவை!

கர்நாடக மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு வரும் 21ம் தேதி முதல் பேருந்து சேவை இயக்கப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பேருந்து, ரயில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசும் மாநில அரசும் ஊரடங்கில் அவ்வபோது தளர்வுகள் அறிவித்து வந்தது. இதைத்தொடர்ந்து 4ஆம் கட்ட பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவித்த போது பல்வேறு மாநிலங்களில் … Read more

திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் கலாநிதி மறைவு!

திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் கலாநிதி மறைவு!

மத்திய சென்னை தொகுதி திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் கலாநிதி (வயது 81) மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். திமுக சார்பில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 1980, 1984 ஆம் ஆண்டு போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்றவர் டாக்டர் கலாநிதி. சிறந்த நாடாளுமன்ற பேச்சாளராக விளங்கினார். திமுகவில் இருந்து விலகி மதிமுகவில் இணைந்த அவர், பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி, மருத்துவப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். சென்னை அண்ணா நகரில் கே.எச்.எம். என்ற … Read more

விவசாய மின் இணைப்பு பெற இந்த முறையில் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

விவசாய மின் இணைப்பு பெற இந்த முறையில் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ளவா்கள் தட்கல் (விரைவு) முறையில் வரும் 21ம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டில் தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். அதன்படி, தருமபுரி மாவட்ட விவசாயிகள் தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெற … Read more

சூர்யா ரசிகர்களின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

சூர்யா ரசிகர்களின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

கல்விமுறையில் உள்ள நீட் தேர்வை குறித்து சூர்யா முன்வைத்த கருத்து பெரும் சர்ச்சை ஆகவும் பேசு பொருளாகவும் தமிழகத்தில் நிலவி வருகிறது. நடிகர் சூர்யா மாணவர்கள் தொடரும் தற்கொலை தொடர்பாக வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். நீட் தேர்வு குறித்தும் தனது கருத்தை பதிவு செய்தார் செய்திருந்தார். சூர்யா கலந்து கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டிலிருக்கும் கல்வி முறை, மாணவர்களின் பாடங்கள், தேர்வுகள் குறித்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இச்சூழ்நிலையில் சமீபத்தில் சூர்யா … Read more

அதிமுகவின் செயற்குழு கூட்டம் செப் 28 ல் கூடுகிறது!இபிஎஸ்-ஓபிஎஸ் அறிவிப்பு!

அதிமுகவின் செயற்குழு கூட்டம் செப் 28 ல் கூடுகிறது!இபிஎஸ்-ஓபிஎஸ் அறிவிப்பு!

அதிமுகவில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடிபழனிசாமி ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் இன்று நடைபெற்றது.சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் இது தொடர்பான அறிக்கையை இபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து வெளியிட்டுள்ளனர். அந்த  அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: “அதிமுகவின் வளர்ச்சி பணிகள் குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கட்சியின் … Read more

முன்னாள் அமைச்சர்  பொன்முடி இடத்தை  நிரப்புவாரா புகழேந்தி?

முன்னாள் அமைச்சர்  பொன்முடி இடத்தை  நிரப்புவாரா புகழேந்தி?

திமுகவின் விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளராக பதவி வகித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி அண்மையில் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்ந்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எல்லாரிடமும் இருந்தது. விழுப்புரம் மாவட்டம் அத்தியூரை சேர்ந்த புகழேந்தி 1973 ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வருகிறார் .மேலும் இவர் கட்சியின் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். இவர் பொன்முடிக்கு மிகவும்  நெருக்கமானவர்  ஆவார். மேலும் இவர் கடந்த … Read more

கலகக் குரல் ஒலிக்க ஆரம்பித்த அதிமுக! இபிஎஸ் நிரந்தர முதல்வர் ! ஓபிஎஸ் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு!

கலகக் குரல் ஒலிக்க ஆரம்பித்த அதிமுக! இபிஎஸ் நிரந்தர முதல்வர் ! ஓபிஎஸ் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு!

தமிழக முதல்வரும் அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் அக்கட்சியின் உயர்நிலை ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணி (செப்டம்பர் 18) அளவில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். சசிகலாவின் விடுதலை தேதி அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் இந்த பேரவையில் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் … Read more

அதிமுக தலைமையகத்தில் கூடவுள்ள கட்சி கூட்டம்! முடிவெடுக்க உள்ள அதிமுக!

அதிமுக தலைமையகத்தில் கூடவுள்ள கட்சி கூட்டம்! முடிவெடுக்க உள்ள அதிமுக!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று  அதிமுக கட்சியின் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அரசியல் ரீதியாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ,அதிமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய பொதுக்குழு கூட்டம் இந்த ஆண்டு … Read more

தடுப்பு மருந்தை ஏற்கனவே வாங்கிய பணக்கார நாடுகள்

தடுப்பு மருந்தை ஏற்கனவே வாங்கிய பணக்கார நாடுகள்

பணக்கார நாடுகள், எதிர்காலத்தில் வரப்போகிற கொரோனா தடுப்பு மருந்துகளில் பாதியை ஏற்கெனவே வாங்கிவிட்டதாக Oxfam வெளியிட்ட ஆய்வு கூறுகிறது. அந்தப் பணக்கார நாடுகளின் மொத்த மக்கள்தொகை, உலக மக்கள் தொகையில் 13 விழுக்காடு மட்டுமே. மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் முன்னிலையில் உள்ள 5 தடுப்பு மருந்துத் தயாரிப்பாளர்களும் செய்துகொண்ட ஒப்பந்தங்களை அரசாங்கச் சார்பற்ற அமைப்பான Oxfam ஆராய்ந்தது. அந்த 5 தடுப்பு மருந்துத் தயாரிப்பாளர்களின் மொத்த உற்பத்தித் திறன் 5.9 பில்லியன் மருந்து அளவு என Oxfam … Read more

டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்குமோ

டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்குமோ

அமெரிக்காவின் மேற்குக் கரையோரம் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ மெக்ஸிகோஎல்லை வரை பரவியுள்ளது. குளிர்பருவம் தொடங்கிவிட்டதால், விரைவில் நிலைமை சீராகும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார். ஆனால், விஞ்ஞானரீதியாக அதற்கு வாய்ப்பில்லை என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். பருவநிலை மாற்றத்தைவிட, காடுகளை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளே, தீக்கான காரணம் என்று டிரம்ப் நம்புகிறார். அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோ பைடன் டிரம்ப்பின் கருத்துகளைச் சாடியுள்ளார். பருவநிலை மாற்றத்தைக் காரணமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் டிரம்ப் மீண்டும் பதவிக்குவந்தால், … Read more