அது இருக்கும் வரை தமிழினையும் தமிழகத்தையும் யாராலும் வீழ்த்த முடியாது! முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

அது இருக்கும் வரை தமிழினையும் தமிழகத்தையும் யாராலும் வீழ்த்த முடியாது! முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணியின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கொண்டாடுவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் காணொலிக் காட்சியின் மூலமாக அந்த கட்சியின் தலைவரும், தமிழகத்தின் முதல் அமைச்சருமான ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற முழக்கத்துடன் தங்களுடைய தேக்கு மர தேகத்தை தீன் தமிழுக்காக அர்ப்பணித்தவர்கள் எல்லோருக்கும் வீரவணக்கம் செலுத்துகிறேன். 1938ஆம் வருடம் தமிழகத்தில் நடைபெற்ற மொழி … Read more

எல்லாம் நடிப்பா கோபால்? பாவனியை சமூகவலைதளத்தில் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

எல்லாம் நடிப்பா கோபால்? பாவனியை சமூகவலைதளத்தில் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

பிரபல விஜய் தொலைக்காட்சியின் சின்னத்தம்பி சீரியல் இன் மூலமாக பிரபலமான பவானி அதன்பிறகு பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பங்கேற்றார். இவர் அந்த நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட போட்டிக்கு தகுதி பெற்றார். சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது என்றால் பிக்பாஸ் வீட்டில் தான் அவர்களுடைய இறந்து போன கணவரை பற்றி பேசி ரசிகர்களை தன் பக்கம் வைத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. அத்தோடு ப்ரீஸ் டாஸ்க்கின் போது ராஜு அவருடைய மனைவியுடன் பாசத்துடன் பேசி … Read more

அரியலூர் மாணவி விடுதியில் தற்கொலை விவகாரம்! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அளித்த விளக்கம்!

அரியலூர் மாணவி விடுதியில் தற்கொலை விவகாரம்! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அளித்த விளக்கம்!

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழதெருவைச் சார்ந்த லாவண்யா என்ற பள்ளி மாணவி மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் அருகில் இருக்கின்ற ஜெயிண்ட் மைக்கேல் மகளிர் தங்கும் விடுதியில் தங்கிப் படித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த 9ம் தேதி அன்று அவர் திடீரென்று வாந்தி எடுத்து இருக்கின்றார். அந்த சமயத்தில் அவருக்கு வயிற்று வலியும் ஏற்பட்டது என்று தெரிவித்ததால், அருகில் இருக்கின்ற மருத்துவமனையில் சிகிச்சை வழங்கியிருக்கிறார்கள். … Read more

தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி?

தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி?

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. விருதுநகரில் நடந்த முதலாவது கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது. அதோடு தொடரிலும் 10 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்தியா, தென்ஆப்பிரிக்கா, அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அதே மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த தொடரை … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மறுபடியும் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக, அதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு முன்பே அறிவித்திருந்தது. அந்த விதத்தில் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பள்ளி,கல்லூரிகள் மற்றும் வழிபாட்டு தளங்களில் ஒரு சில கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை தமிழக அரசு … Read more

பொங்கல் பரிசில் ஏற்ப்பட்ட குளறுபடி! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

பொங்கல் பரிசில் ஏற்ப்பட்ட குளறுபடி! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு பொதுமக்களுக்கு இலவசமாக தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டது. இந்த பரிசு தொகுப்பில் வெல்லம், பச்சரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் ,பாசிப்பருப்பு ,மஞ்சள்தூள், மல்லிதூள், மிளகாய்தூள்,கடுகு,சீரகம் ,மிளகு ,உப்பு,கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு, கோதுமை மாவுடன் கரும்பும் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட பொருட்கள் தரமற்றதாக இருப்பதாலும், வெப்பம் காரணமாக, வெள்ளம் உருகி விடுவதாகவும், பச்சரிசி பொட்டலங்கள் உடைக்கப்பட்டு இருப்பதாகவும், ஏலக்காய் அளவு மிகவும் சிறியதாக இருப்பதாகவும், பொதுமக்களிடையே … Read more

நீண்ட நாட்களாக அசையாத பெட்ரோல் டீசல் விலை நிலவரம்! காரணம் என்ன தெரியுமா?

நீண்ட நாட்களாக அசையாத பெட்ரோல் டீசல் விலை நிலவரம்! காரணம் என்ன தெரியுமா?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதனடிப்படையில், இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இதன் காரணமாக, தினம்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், எப்போதும் … Read more

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி! ஒரே நாளில் 50,000க்கும் மேற்பட்டோர் செலுத்திக்கொண்டனர்!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி! ஒரே நாளில் 50,000க்கும் மேற்பட்டோர் செலுத்திக்கொண்டனர்!

தமிழ்நாட்டில் கடந்த 10-ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் இருப்பவர்களுக்கு நோய்தொற்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். இந்த சூழ்நிலையில், வரும் 31ம் தேதிக்குள் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு தகுதியானவர்கள் என்று சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து எல்லா தடுப்புசி மையங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் தொடங்கப்பட்டு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பூஸ்டர் … Read more

செல்போனில் படம் பார்த்த மகனை கண்டித்த தாய்! விபரீத முடிவெடுத்த மகன்!

செல்போனில் படம் பார்த்த மகனை கண்டித்த தாய்! விபரீத முடிவெடுத்த மகன்!

செங்குன்றம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் அமுதவல்லி கணவரை இழந்தவர் செங்குன்றத்தில் இருக்கின்ற இவர் காய்கறி கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் லோகேஸ்வரன் இவர் சென்னை சாலிகிராமத்தில் இருக்கின்ற உறவினர் வீட்டில் தங்கி அங்கே இருக்கின்ற பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். தற்சமயம் பள்ளி விடுமுறை என்ற காரணத்தால், தன்னுடைய வீட்டிற்கு வந்து இருந்ததாக சொல்லப்படுகிறது. 12 வயது சிறுவனான அவர் நேற்று காலை வீட்டில் கைபேசியில் படம் பார்த்துக் கொண்டிருந்தார். இதனை அவருடைய … Read more

வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகள் கன்னத்தில் பளார் விட்ட மணமகன்! திருமணத்தை நிறுத்திய மணமகள்!

வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகள் கன்னத்தில் பளார் விட்ட மணமகன்! திருமணத்தை நிறுத்திய மணமகள்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இருக்கின்ற ஒரு கிராமத்தைச் சார்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் சென்னையில் இருக்கின்ற ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த எம்எஸ்சி பட்டதாரியான இளம்பெண் ஒருவருக்கும், நேற்று காலை காடாம்புலியூர் பகுதியில் இருக்கின்ற ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சமயத்தில் மண்டபத்தில் பாட்டுக் கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் மணமக்கள் இருவரும் … Read more