நோய்த்தொற்று பரவல் காரணமாக கலையிழந்த தைப்பூசத் திருவிழா!

நோய்த்தொற்று பரவல் காரணமாக கலையிழந்த தைப்பூசத் திருவிழா!

உலக மக்களால் தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமானின் 3வது படை வீடாக பழனி முருகன் கோவில் இருக்கிறது, இங்கே வருடம் தோறும் தைப்பூச திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம் இந்த வருடத்திற்கான தைப்பூச திருவிழா பழனி முருகன் கோவிலில் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து குவியத் தொடங்கினார்கள், அலகு குத்தியும், காவடி எடுத்தும், முருகனுக்கு நேர்த்திக்கடன் … Read more

அமைச்சர் நடத்திய அதிரடி ஆய்வு! மகிழ்ச்சியில் நோயாளிகள்!

அமைச்சர் நடத்திய அதிரடி ஆய்வு! மகிழ்ச்சியில் நோயாளிகள்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கோடம்பாக்கம் மண்டலத்தில் சமுதாய கூடத்தில் செயல்படும் நோய்த்தொற்று பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்தார். இதில் அமைச்சருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது, அந்த விதத்தில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை கோடம்பாக்கம் மண்டலத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆரம்பித்து வைத்திருக்கிறார். அதன்பிறகு … Read more

இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பு வழங்கப்பட்டால் என்ன நடக்கும்? பும்ரா பரபரப்பு பதில்!

இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பு வழங்கப்பட்டால் என்ன நடக்கும்? பும்ரா பரபரப்பு பதில்!

இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் இருக்கின்ற பார்ல் நகரில் நாளைய தினம் நடைபெற இருக்கிறது இதனையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டன் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா நேற்று வழங்கிய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவு தொடர்பாக விராட் கோலி அணியின் கூட்டத்தில் தெரிவித்தார் அவருடைய இந்த தனிப்பட்ட முடிவை நாங்கள் மதிக்கிறோம் … Read more

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து ஏன்? காரணம் இதோ!

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து ஏன்? காரணம் இதோ!

அண்மைக் காலமாகவே திரைப்பிரபலங்கள் விவாகரத்து அதிகரித்துவருகிறது, பாலிவுட் நடிகர் அமீர்கானில் ஆரம்பித்து பல திரை பிரபலங்கள் அவர்களுடைய விவாகரத்து செய்தியை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள். தற்போது அந்த வரிசையில் மேலும் ஒரு தம்பதியினர் விவாகரத்து செய்தியை அறிவித்திருக்கிறார்கள். அந்த தம்பதியர்கள் வேறுயாருமல்ல கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தற்போது திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் தனுஷ் அவர்களும் தான் .இவர்களுடைய விபத்து குறித்து இருவரும் ஒரே இதமான அறிக்கையை … Read more

மீண்டும் சின்ன தம்பி குஷ்புவாக மாறிய நடிகை! கிளுகிளுப்பில் ரசிகர்கள்!

மீண்டும் சின்ன தம்பி குஷ்புவாக மாறிய நடிகை! கிளுகிளுப்பில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் ஒரு நடிகை என்பதையும் கடந்து தற்போது தயாரிப்பு, அரசியல், என்று இரு மிகப்பெரும் துறைகளிலும் தன்னுடைய முத்திரையை பதித்தவர் நடிகை குஷ்பு இவர் இதுவரையில் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவைப் பொறுத்தவரையில் நடிகைகள் ஒல்லியாக இருந்தால்தான் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எல்லோரும் நினைத்திருந்த போது அதனை அப்படியே தலைகீழாக மாற்றிய ஒரே நடிகை குஷ்பூ தான். சற்று பூசிய உடலுடன் இருந்த இவரை தமிழ் ரசிகர்களுக்கு … Read more

ராஜேந்திரபாலாஜியை திடீரென்று சந்தித்த அந்த 4 முன்னாள் அமைச்சர்கள்!

ராஜேந்திரபாலாஜியை திடீரென்று சந்தித்த அந்த 4 முன்னாள் அமைச்சர்கள்!

பண மோசடி வழக்கில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறையிலடைக்கப்பட்டார். அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதனை அடுத்து திருச்சி சிறையில் இருந்து கடந்த 13-ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான அவர் சிவகாசி அருகே இருக்கின்ற திருத்தங்கல் வீட்டில் தங்கி இருக்கிறார். இந்த சூழ்நிலையில், நேற்று மதியம் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் ஆர் பி உதயகுமார், சிவி சண்முகம், சட்டசபை உறுப்பினர்கள் ராஜன்செல்லப்பா, பெரிய புல்லான் மற்றும் … Read more

ஸ்டாலின் தலைமையில் இன்று கூடும் மாநில திட்டக்குழு கூட்டம்!

ஸ்டாலின் தலைமையில் இன்று கூடும் மாநில திட்டக்குழு கூட்டம்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் ஆய்வுக்கூட்டம் காலை 10 மணி அளவில் தொடங்கியது . சென்னை எழிலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றார்கள். அதோடு டிஆர்பி ராஜா, டாபே மல்லிகா, சீனிவாசன் மற்றும் சித்த மருத்துவர் சிவராமன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு தற்போது செயல் அடுத்தப்பட … Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! 20க்கும் மேற்பட்ட காளைகளை அடக்கிய இளைஞருக்கு கார் பரிசு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! 20க்கும் மேற்பட்ட காளைகளை அடக்கிய இளைஞருக்கு கார் பரிசு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்றைய தினம் காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்றது கோட்டை முனியசாமி வாடிவாசல் திடலில் நடைபெற்ற இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் சட்டசபை உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி திருக்கோவில் காளை, கருப்புசாமி கோவில் காளை, வலசை கருப்பசாமி கோவில் … Read more

குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திகளின் அனுமதி மறுப்பு ஏன்? உண்மையான காரணம் இதோ!

குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திகளின் அனுமதி மறுப்பு ஏன்? உண்மையான காரணம் இதோ!

நடப்பாண்டின் 75வது குடியரசு தினவிழாவில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திகளை அனுமதி மறுக்கப்பட்டது, தென்மாநிலங்களில் கர்நாடகா தவிர வேறு எந்த மாநிலங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த சூழ்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில் 2019 மற்றும் 2020 -2021 உள்ளிட்ட கடந்த 3 … Read more

மோடியை தவறாக சித்தரித்த விவகாரம்! பிரபல தொலைகாட்சிக்கு மத்திய அரசிடம் இருந்து பறந்த நோட்டீஸ்!

மோடியை தவறாக சித்தரித்த விவகாரம்! பிரபல தொலைகாட்சிக்கு மத்திய அரசிடம் இருந்து பறந்த நோட்டீஸ்!

ஜீ தமிழ் தொலைக்காட்சி தமிழகத்தில் பிரபலமான ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இந்த தொலைக்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடியை கேலிசெய்து ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியில் காட்சிகள் அமைக்கப்பட்டதாக தமிழக பாஜக கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் உத்தரவின் அடிப்படையில் அவருடைய அமைச்சரவையில் இருந்து அந்த தொலைக்காட்சிக்கு நேற்று எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த நிறுவனத்தின் நொய்டாவில் இருக்கின்ற … Read more