போலி ரெம்டிசிவர் மருந்து விற்பனை! வசமாக சிக்கிய பாஜக நிர்வாகி!

போலி ரெம்டிசிவர் மருந்து விற்பனை! வசமாக சிக்கிய பாஜக நிர்வாகி!

மெடிக்கல் ஏஜென்சி மேலாளரும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியுமான ராஜேஷ் மகேஸ்வரர் என்ற நபர் ஆக்ஸிஜன் மீட்டர்களை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்திருக்கிறார். வெளிச்சந்தையில் 600 முதல் 700 ரூபாய் வரையிலான விலைக்கு விற்பனை செய்யப்படும் ஆக்ஸிஜன் மீட்டர்களை 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து பல லட்சம் ரூபாய் சம்பாதித்து இருக்கிறார் இந்த நிர்வாகி என சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் மீட்டர் மற்றும் போலீஸார் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக … Read more

மத்திய மாநில அரசுகளுக்கு அன்புமணி ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

மத்திய மாநில அரசுகளுக்கு அன்புமணி ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது ஜனவரி மாதம் முதல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாய் 51 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் 79 ரூபாய் 21 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பெட்ரோல் டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை. ஒரு சில தினங்கள் விலை குறைப்பு செய்யப்பட்டது .ஆனால் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தார்கள். இந்த நிலையில் மே … Read more

வெளுத்து வாங்கப்போகும் மழை விவசாயிகளே உஷார்! வானிலை ஆய்வு மையம்!

வெளுத்து வாங்கப்போகும் மழை விவசாயிகளே உஷார்! வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்காசி,திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும், மற்ற … Read more

எட்டு வழி சாலை திட்டம்! அமைச்சர் தெரிவித்த அதிரடி பதில்!

எட்டு வழி சாலை திட்டம்! அமைச்சர் தெரிவித்த அதிரடி பதில்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் எட்டு வழி சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்று ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக பெரும் அளவில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இந்த நிலையில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் எட்டு வழிச்சாலைக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என்று தெரிவித்திருக்கிறார். நேற்றைய தினம் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கின்ற செம்மொழிப் பூங்காவில் ஆய்வுசெய்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த … Read more

அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த வழக்கறிஞர்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த வழக்கறிஞர்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சார்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் நோய் தொற்று வைரஸ் பரவலை தடுப்பதற்கு அறிவிக்கப்பட்ட இருக்கின்ற பொது ஊரடங்கு காரணமாக, பாதிக்கப்பட்டு இருக்கின்ற மக்களுக்கு உதவி புரியும் விதமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் தருவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதில் முதல் தவணையாக 2000 ரூபாய் வரும் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் தமிழ்நாட்டில் இரண்டு … Read more

நோய்த் தொற்று பாதிப்பு! மத்திய அரசின் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை!

நோய்த் தொற்று பாதிப்பு! மத்திய அரசின் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை!

கடந்த சில தினங்களில் நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் அத்தியாவசியமாக இருக்கும் மருந்துகளின் உற்பத்தி பல மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ரெம்டிசிவர் மருந்து பல லட்சம் டோஸ்கள் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திரமோடியிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தார்கள். நேற்றைய தினம் மாலை நாட்டில் நோய் தொற்று தன்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த சமயத்தில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இதுதொடர்பாக தீவிர … Read more

ஸ்டெர்லைட் ஆலையில் தொடங்கியது! ஆக்சிஜன் வினியோகம்!

ஸ்டெர்லைட் ஆலையில் தொடங்கியது! ஆக்சிஜன் வினியோகம்!

நாடு முழுவதும் நோய்த்தொற்று இரண்டாவது மிக வேகமாக பரவி வருகிறது இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகமாக இருக்கிறது. நாட்டில் பல இடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதால் பரிதாபமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகிறார்கள். இதனையடுத்து தூத்துக்குடியில் இருக்கின்ற ஸ்டெர்லைட் அலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது, இதற்கு தமிழக அரசும் அனுமதி கொடுத்திருக்கிறது. இதனையடுத்து கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது இந்த கண்காணிப்பு குழுவினர் ஆய்வு … Read more

உயராத பெட்ரோல் விலை! வாகன ஓட்டிகள் நிம்மதி!

உயராத பெட்ரோல் விலை! வாகன ஓட்டிகள் நிம்மதி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அவற்றை மையமாக வைத்தே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்துவரும் இந்தியன் ஆயில் மற்றும் பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பிரபலமான எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. நோய் தொற்று காரணமாக … Read more

எம்எல்ஏ பதவியை தூக்கி எறிந்த பாஜக பிரபலங்கள்!

எம்எல்ஏ பதவியை தூக்கி எறிந்த பாஜக பிரபலங்கள்!

அண்மையில் தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதன் முடிவுகள் கடந்த 2ஆம் தேதி வெளியானது. அதன்படி தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. தமிழகத்தின் முதலமைச்சராக அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழகத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 76 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்று இருக்கிறது. அந்த கட்சியின் சார்பாக … Read more

கிண்டுவதோடு சேர்ந்து கிண்டலும் வருமா? கவிஞர் வைரமுத்துவின் நக்கல்!

கிண்டுவதோடு சேர்ந்து கிண்டலும் வருமா? கவிஞர் வைரமுத்துவின் நக்கல்!

நோய்தொற்று இரண்டாவது அலை பல முக்கிய ஆட்களை தாக்கியிருக்கிறது தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில் முக்கியமானவராக பார்க்கப்படும் பேராசிரியர் ஹாஜா கனியை சில தினங்களுக்கு முன்பு இந்த நோய்த்தொற்று பற்றிக்கொண்டது. பல நண்பர்கள் அவருக்கு தொலைபேசி மூலமாக ஆலோசனைகளை தெரிவித்தும்,விரைவில் நலம் பெற வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். பேராசிரியர் நெருக்கமான நண்பர் கவிஞர் வைரமுத்துவும், அவருக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அப்போது அடிக்கடி ஆவி பிடிக்க சொல்லி அறிவுரை கூறிய வைரமுத்து ஆவி பிடிப்பது பற்றி … Read more