Breaking News

பள்ளி மாணவிகள் சென்ற ஆட்டோ விபத்து! ஈரோட்டில் பரபரப்பு!

Auto accident of school students! Excitement in Erode!

பள்ளி மாணவிகள் சென்ற ஆட்டோ விபத்து! ஈரோட்டில் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகள் பேருந்தில் பயணம் செய்வதை பயந்து கொண்டு பெற்றோர்கள் ஆட்டோ அல்லது இருசக்கரம் வாகனம் மூலம் அழைத்து வந்து பள்ளியில் விடுவார்கள். வழக்கம்  போல் பள்ளி விட்டு ஆட்டோவில் நான்கு மாணவிகள் வீட்டிற்கு  சென்று கொண்டிருந்தனர். அப்போது ராஜா வீதியில் ஆட்டோவானது  சென்று கொண்டிருந்தது.அப்போது  பின்னால் அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக ஆட்டோவில் மீது  மோதியது. ஆட்டோவின் பின்புறம் முழுமையாக சேதம் அடைந்து ஆட்டோவில் உள்ள மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

அக்கம்பக்கத்தினர்   உதவியுடன் 3 மாணவிகளையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஒரு மாணவியை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தானது எதிர்பார விதமாக நடந்ததா அல்லது யாராவது விபத்து ஏற்பட காரணமா என்று சத்தியமங்கலம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Comment