சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் ஆவாரம் பூ டீ – எப்படி செய்யலாம்?

0
141
#image_title

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் ஆவாரம் பூ டீ – எப்படி செய்யலாம்?

ஆவாரம் செடி தாவர வகையைச் சேர்ந்தது. ஆவாரம் பூவில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. ஆவாரம் பூவை சாப்பிட்டு வந்தால், சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்கள் குணமடையும்.

இதன் இலை, பூ, பட்டை உடலைப் பலப்படுத்தும். ஆவாரம் இலை சரும அழகை பராமரிக்கும். ஆவாரம் பூ படவுர் வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வந்தால் முடி கருகருவென வளரும். மேலும், ஆவாரம் பூ நோய் எதிர்ப்பு சக்தியை தரும். ஆவாரம் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

சரி… இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட ஆவாரம் பூவில் எப்படி டீ செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

ஆவாரம் பூ – 1 கப்

எலுமிச்சை பழச்சாறு – 1 ஸ்பூன்

வெல்லம் – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில், காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

கொதித்த பிறகு, அந்த ஆவாரப் பூ தண்ணீரை வடிகட்டி, அதில் எலுமிச்சை பழச்சாறு, வெல்லம் கலந்தால் சுவையான ஆவாரம் பூ டீ ரெடி.

தினமும் இந்த ஆவாரப் பூ டீ சாப்பிட்டு வந்தால், சர்க்கரை அளவு குறைவதுடன், உடலில் உள்ள வெப்பத்தையும் தணிக்கும்.

Previous articleமகளிர் உரிமைத் தொகை விவகாரம் : சர்ச்சையில் சிக்க வைத்த தந்தி டிவி!!.
Next articleசனாதனம் குறித்து பேசாதீர்கள் : அதற்கு இதுதான் காரணமா?