ஏவிஎம் ஆலோசனைப்படி நடிகர் திலகத்திற்கு கொடுத்த வாய்ப்பு! இன்றும் மறக்காத அந்த படம்!

0
213
#image_title

இயக்குனர் S பாலச்சந்தர் அகிரா குரோசாவாவின் ரஷோமோனை ( 1950) திரைப்பட விழாவில் பார்த்து , அதிலிருந்து ஈர்க்கப்பட்டு அதே கதை பாணியில் ஒரு நாடகத்தை எழுதினார். ஆனால் அவருடைய கதை அகில இந்திய வானொலி மையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

 

அந்த காலத்தில் பாடல்கள் நடனம் சண்டை காட்சிகள் எதுவும் இல்லாமல் எடுக்கப்பட்ட படம் என்றால் “அந்த நாள் ” என்ற நடிகர் திலகத்தின் படம்.

 

முதலில் குரோசாவாவின் கதையில் ஈர்க்கப்பட்ட இயக்குனர் பாலச்சந்தர், அவரே முதலில் நடித்து பல காட்சிகளை பார்த்திருக்கிறார். அதில் அவருக்கு திருப்தி இல்லை. நேரடியாக இதை ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் அவர்களிடம் இந்த கதையை சொன்னவுடன், இந்த கதையை படமாக்கலாம் என்று செட்டியார் அவர்கள் உறுதியளித்திருக்கிறார்.

 

இந்த படத்தில் நடிக்க மெய்யப்ப செட்டியார் அவர்கள் சிவாஜி கணேசன் அவர்களை பரிந்துரை செய்திருக்கிறார். அதன் பின் சிவாஜி கணேசன் அவர்கள் ஏற்று நடித்த ஒரு அற்புதமான படம் என்றால் இந்த படத்தை கூறலாம். அந்தக் காலத்தில் 1954 ஆம் ஆண்டு ஒரு மர்மம் திரில்லர் கதை என்றால் இந்த கதையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

 

இந்தியாவின் ரகசியங்களை ஜப்பானிற்கு விற்கும் ஒரு இளைஞன். இதன் உண்மை மனைவிக்கு தெரிந்து தேசத் துரோகியான தன் கணவனை மனைவி சுட்டுக் கொல்கிறாள். இதனை எப்படி போலீசார் கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் கதை.

 

ஒவ்வொருவரையும் விசாரிக்கும் பொழுது ஒவ்வொரு கதை பிறக்கிறது. ஒவ்வொரு நபர் வருகிறார்கள். ஒவ்வொரு நபரையும் விசாரித்த பிறகு தான் போலீசார் கைரேகையை வைத்து ராஜனின் மனைவியான உஷா, ராஜனை சுட்டுக் கொன்றார் என்ற உண்மையை கண்டுபிடித்தார்கள்.

 

சிவாஜி கணேசன் அவர்களிடம் பேட்டியில், இந்த மாதிரி ஒரு தேச துரோகியான ஒரு பாத்திரத்தை எடுத்து எப்படி நடித்தீர்கள் என்று கேட்ட பொழுது ” ஒரு இளைஞனின் கண்டுபிடிப்பு இந்தியாவில் நிராகரிக்கப்பட்டதால் அவன் ஜப்பானுக்கு இந்திய ரகசியங்களை விற்று துரோகி ஆகிறான். இளைஞர்களை நாம் பாராட்ட தவறியதால் ஏற்படும் துரோகங்களை பற்றி தேசபக்தியை கருப்பொருளாக கொண்டு தான் இந்த படம் இயற்றப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். ஒரு நாடு திறமையான இளைஞர்களின் முயற்சியை பாராட்டவில்லை என்றால் எப்படி இளைஞர்கள் தேச துரோகிகளாகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் படமாக தான் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். மேலும் “கொலையும் செய்வாள் பத்தினி” என்ற பொருளையும் இதில் உணர்த்துவதாகக் கூறியிருந்தார்.

 

அந்த காலத்தில் இந்தப் படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்தாலும், பொருளாதார ரீதியாக இந்த படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இன்றளவும் இந்த படம் நிற்கிறது என்றால் இயக்குனர் S பாலச்சந்திரன் அவர்களை காரணம். மேலும் சிவாஜி மற்றும் பண்டரிபாயின் அற்புதமான நடிப்பும் காரணம்.

author avatar
Kowsalya