கொரோனாவிற்கு பிறகு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகரிப்பு! பொது சுகாதாரத்துறை இயக்குநர் பேட்டி!

0
198
#image_title

கொரோனாவிற்கு பிறகு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகரிப்பு! பொது சுகாதாரத்துறை இயக்குநர் பேட்டி!

கொரோனா நோய்த் தொற்றுக்கு பின்னர் மக்களிடையே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் அதிகரித்துவிட்டதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று காரணமாக பல லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். இதை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள், தடுப்பூசிகள், மாஸ்க் போன்ற பல நடைமுறைகள் பின்பற்றப்பட்டது. அதன். பின்னர் உலகம் முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா தொற்று இந்தியாவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலத்தில் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் சார்பில் சென்னையில் ‘மருத்துவத்தின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் கடந்த ஜனவரி 19ம் தேதி தொடங்கியது. சுமார் மூன்று நாட்கள் நடந்த இந்த பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று(ஜனவரி21) நிறைவு பெற்றது. இதில் கலந்து கொண்ட பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அவர்கள் ‘கொரோனாவிற்கு பிறகு எதை நோக்கி நாம் செலுத்தும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அந்த உரையாடலில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அவர்கள் கூறியது என்னவென்றால் “கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் மற்ற நோய்களுக்கான சிகிச்சை தடைப்பட்டது.

மற்ற நோய்களுக்கான சிகிச்சை தடைப்பட்டதை அடுத்து இணை நோய்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து கொரோனா தொற்று பாதிகப்பட்டு அதிலிருந்து குணமடைந்த மக்கள் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற இணை நோய்களாலும் பாதிக்கப்பட்டனர்.

தற்பொழுது உருமாற்றம் அடைந்த ஜே.என் 1 வகை கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. இந்த வகை கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது இல்லை என்றாலும் வருங்காலங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வைரஸ் தொற்று பரவ வாய்ப்பு இருக்கின்றது.

அவ்வாறு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் தொற்று பரவினால் அதை தற்போது உள்ள தடுப்பூசிகளை கொண்டு கட்டுப்படுத்த முடியாது. இதற்கு என்று தனியாக தடுப்பூசிகளையும், மருந்துகளையும் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறினார்.