நாடாளுமன்ற தேர்தல் 2024! இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

0
264
#image_title

நாடாளுமன்ற தேர்தல் 2024! இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

இந்த ஆண்டுக்கான அதாவது 2024வது ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்று(ஜனவரி21) ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் ஜனவரி 22ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று(ஜனவரி22) நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் தற்பொழுது மொத்தமாக 6.18 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். அதில் ஆண்கள் 3.03 கோடி வாக்காளர்களும் பெண்கள் 3.14 கோடி வாக்காளர்களும் 8294 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இருக்கின்றனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் இருக்கின்றனர்.

இந்த முறை வாக்காளர் பட்டியலில் இருந்து 13 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் புதிதாக சேர்த்தப்பட்டுள்ளது. மேலும் 6 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் 3.23 லட்சம் வாக்காளர்கள் திருத்தம் செய்துள்ளனர்.

தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி இருக்கின்றது. சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 6.60 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியை தொடர்ந்து கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டன்பாளையத்தில் மொத்தம் 4.62 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர்.

அதே போல தமிழகத்தில் குறைவான வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி இருக்கின்றது. கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 172140 வாக்காளர்கள் இருக்கின்றனர். இரண்டாவதாக சென்னை மாவட்ட துறைமுக சட்டமன்ற தொகுதி குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதியாக இருக்கின்றது.

இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.