செரிமான பிரச்சனைகளா?? நீங்கள் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!!!

Photo of author

By Amutha

செரிமான பிரச்சனைகளா?? நீங்கள் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!!!

நமது உடலில் நாம் உண்ணும் உணவு சரியான முறையில் செரிமானம் ஆனால் மட்டுமே நமது உடல் நலத்துக்கு நல்லது.உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.அதை விடுத்து தவறான உணவு பழக்கங்களால் அஜீரணம், நெஞ்சு எரிச்சல், போன்ற செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம்.

இன்றைய காலகட்டத்தில் நாம் வேலைக்கு செல்லும் அவசரத்தில் காலை உணவு தவிர்ப்பது, சாப்பிட்டவுடன் படுப்பது, கடைகளில் காரசாரமான உணவுகளை உண்பது, சரியான தூக்கமின்மை போன்ற காரணங்களால் செரிமான கோளாறுகள் ஏற்படும்.

நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின், தாது உப்புக்கள் சரியான முறையில் சரிவிகித அளவில் இருக்க வேண்டும். அப்போது தான் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.செரிமான மண்டலமும் சீராக இயங்கும்.அதனை விடுத்து நாம் சில தவறான முறையில் உணவுகளை உண்பது நமது செரிமான சக்தியை குறைக்கும். இதனால் தலைவலி, வாந்தி மயக்கம் ஏற்படலாம்.

மேலும் போதுமான நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நமது செரிமான செயல்பாடு மிகவும் சவாலான விஷயம்.

எனவே நாம் செரிமானத்தை தடுக்கும் உணவுகளை காண்போம்.

1. வறுத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அவை செரிமான மண்டலத்தில் அதிக நேரம் தங்கி வீக்கம் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

2. பால் மற்றும் பால் பொருட்களை கவனத்துடன் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் பால் பொருட்களில் உள்ள லாக்டோஸ் ஜீரணிக்க கடினமான இருக்கும்.ஜீரணிக்கப்படாத போது வீக்கம்,வாயு ஏற்படலாம்.

3.கார்பனேற்றப்பட்ட பானங்கள் அமிலத்தன்மை கொண்டவை. மேலும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற பழங்களில் அமிலத்தன்மை உள்ளது. வயிற்று உட்புற பகுதியில் எரிச்சலை உண்டாக்கும். வயிற்றில் கோளாறுகள் உள்ள போது இந்த பழங்களைத் தவிர்க்க வேண்டும்.

4.காரமான உணவுகள் தவிர்க்க வேண்டும். வாந்தி, குமட்டல் போன்றவை இருக்கும் போது செரிமான அமைப்பை தூண்டச்செய்யும் காரம் கொண்ட உணவுகளை உண்பது சிலருக்கு அஜீரணத்தை ஏற்படுத்தும்.

5. வெண்ணெய், ஐஸ்கிரீம், சிவப்பு இறைச்சி போன்ற அதிக கொழுப்பு உள்ள உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும் மேலும் செரிமான மண்டலத்தில் சுருக்கங்கள் ஏற்படுத்தி வயிற்றுப் போக்கு பிரச்சினையை மோசமாக்கும்

6. நார்ச்சத்துக்கள் இல்லாத பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது.

7. செயற்கை இனிப்புகள் மற்றும் மதுப்பழக்கத்தால் வயிற்றுப் புறணி பகுதியில் நச்சுத்தன்மையை உருவாக்கும்.

8. மேலும் காஃபி மற்றும் டீயை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு இருந்தால் அதனை அதிகமாகும்.

மேலும் ஏதாவது ஒரு நாளில் மேற்கண்ட உணவு பழக்கங்கள் சாதாரண வயிற்றுவலியை தவிர வேறு பிரச்சினை வராது. அதுவே தொடரும் போது நமக்கு செரிமான மண்டலத்தில் குறைபாடுகள் ஏற்படலாம்.