அட! இவர் ஒருவர் போதுமே! இனி எதுக்கு ஹாஸ்பிட்டல்? சமையல் அறையில் உள்ள மருத்துவர்…
இஞ்சி ஒரு இயற்கை மருத்துவ பொருள் நாம் அறிந்தது தான். ஆனால் கால் கிலோ இஞ்சி இருந்த போதும் நூறு மருத்துவர்க்கு சமம். நாம இஞ்சியை டீக்கும், அசைவ உணவுக்கு மட்டுமே பயன் படுத்ததுக்கிறோம். ஆனால் பாருங்கள் இஞ்சி இருந்தால் உங்களுக்கு எவ்வளவு செலவு மிச்சம் என்று, நோய்களை நீக்குவதில் இஞ்சி சமையலறை மருத்துவர்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் துர்நாற்றம் தீரும், சுறுசுறுப்பு ஏற்படும். இஞ்சியை துவையல் ஆக்கி சாப்பிட வயிற்று உப்புசம் தீரும்.
காலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்,உடம்பு இளமை பெறும். 10 கிராம் இஞ்சி, பூண்டு, இரண்டையும் அரைத்து ஒரு கப் தண்ணீரில் கலந்து காலை மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
இஞ்சி சாறோடு தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர தொந்தி கரைந்து விடும். இஞ்சி சாறில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
இஞ்சி மிளகு இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும். இஞ்சியை வதக்கி தேன் சேர்த்து கிளறி நீர் விட்டு கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்து வர வயிற்றுப்போக்கு தீரும்.
இஞ்சி அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின் நீரை எடுத்து துளசி இலை சாரை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒருவாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும். இஞ்சி சாறில் தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும்,இளமை பெருகும்.
இஞ்சி சாறுடன் வெங்காய சாறு கலந்து ஒரு வாரம் காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்து வர நீரிழிவு குறையும். இஞ்சி சாறு எலுமிச்சை சாறு வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர ஆரம்பகால ஆஸ்துமா இரைப்பு இருமல் குணமாகும்.
முக்கிய குறிப்பு இஞ்சியை தோல் சீவிய பிறகு தான் பயன்படுத்த வேண்டும். இஞ்சி தோல் சீவி காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து பிரிட்ஜ்-ல் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.