அரசு வேலை வாய்ப்பை பெற விழிப்புணர்வு பேனர்! மாணவர்களை ஊக்குவிக்க அசத்தலான செயல்!

Photo of author

By Rupa

அரசு வேலை வாய்ப்பை பெற விழிப்புணர்வு பேனர்! மாணவர்களை ஊக்குவிக்க அசத்தலான செயல்!

Rupa

Awareness banner to get government job opportunity! Amazing activity to motivate students!

அரசு வேலை வாய்ப்பை பெற விழிப்புணர்வு பேனர்! மாணவர்களை ஊக்குவிக்க அசத்தலான செயல்!

தேனி மாவட்டம் பெரியகுளம் சிட்டி அரிமா சங்கம் சார்பில் பெரியகுளத்தில் உள்ள கீழ வடகரை ஊர் புற நூலக வளர்ச்சிக்கும் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் போட்டித் தேர்வுகள் எழுதி  அரசு வேலை வாய்ப்பை பெறுவதற்கும் ,நூலகத்துக்கு உறுப்பினர்களாகவும் மற்றும் புரவலர்களாகவும் சேர்ந்து நூலகம் வளர்ச்சி பயன் பெறும் வகையில் விளம்பர நோட்டிஸ் மற்றும் விழிப்புணர்வு பேனர் ஆகியவற்றை வாசகர் வட்ட தலைவர் அ மோகன் தலைமையில் பெரியகுளம் சிட்டி அரிமா சங்க தலைவர் MG ராஜேஷ் மாவட்ட தலைவர் SSB சூரியநாராயணன் மற்றும் விஜயகார்த்திகேயன் நாகராஜ் ஆகியோர்கள் வழங்கினார்கள்.

அவர்களுக்கு கீழ வடகரை நூலக வாசகர் வட்டம் மூலம் நன்றியும் பாராட்டும்தெரிவித்துக் கொள்ளப்பட்டது. விழாவில் நூலக புரவலர்கள் ஜெயராஜ் ,பொறியாளர் இராஜாமணி, முன்னாள் இராணுவம் ஜெயராம் நாயுடு மணிபூசாரி ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் நூலகர் ராஜகோபால் நன்றியுரை ஆற்றினார்.