அரசு வேலை வாய்ப்பை பெற விழிப்புணர்வு பேனர்! மாணவர்களை ஊக்குவிக்க அசத்தலான செயல்!

0
225
Awareness banner to get government job opportunity! Amazing activity to motivate students!
Awareness banner to get government job opportunity! Amazing activity to motivate students!

அரசு வேலை வாய்ப்பை பெற விழிப்புணர்வு பேனர்! மாணவர்களை ஊக்குவிக்க அசத்தலான செயல்!

தேனி மாவட்டம் பெரியகுளம் சிட்டி அரிமா சங்கம் சார்பில் பெரியகுளத்தில் உள்ள கீழ வடகரை ஊர் புற நூலக வளர்ச்சிக்கும் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் போட்டித் தேர்வுகள் எழுதி  அரசு வேலை வாய்ப்பை பெறுவதற்கும் ,நூலகத்துக்கு உறுப்பினர்களாகவும் மற்றும் புரவலர்களாகவும் சேர்ந்து நூலகம் வளர்ச்சி பயன் பெறும் வகையில் விளம்பர நோட்டிஸ் மற்றும் விழிப்புணர்வு பேனர் ஆகியவற்றை வாசகர் வட்ட தலைவர் அ மோகன் தலைமையில் பெரியகுளம் சிட்டி அரிமா சங்க தலைவர் MG ராஜேஷ் மாவட்ட தலைவர் SSB சூரியநாராயணன் மற்றும் விஜயகார்த்திகேயன் நாகராஜ் ஆகியோர்கள் வழங்கினார்கள்.

அவர்களுக்கு கீழ வடகரை நூலக வாசகர் வட்டம் மூலம் நன்றியும் பாராட்டும்தெரிவித்துக் கொள்ளப்பட்டது. விழாவில் நூலக புரவலர்கள் ஜெயராஜ் ,பொறியாளர் இராஜாமணி, முன்னாள் இராணுவம் ஜெயராம் நாயுடு மணிபூசாரி ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் நூலகர் ராஜகோபால் நன்றியுரை ஆற்றினார்.

Previous articleஆறாம் வகுப்பு மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை! 
Next articleதீராத வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here