பட்டதாரிகளுக்கு PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் அசத்தல் வேலை..விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்! மிஸ் பண்ணிடாதீங்க!

பட்டதாரிகளுக்கு PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் அசத்தல் வேலை..விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்! மிஸ் பண்ணிடாதீங்க!

முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PGIMER) காலியாக உள்ள Non-Academic Senior resident பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இப்பதவிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இன்று அதாவது செப்டம்பர் 8ல் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிறுவனம்: முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER)

பணி: Non-Academic Senior resident

காலிப்பணியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Non-Academic Senior resident பணிக்கென மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழத்தில் ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் விதிகளின் படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

Non-Academic Senior resident பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் pgimer.edu.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பிறகு அவற்றை பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் இன்று அதவாது 08-09-2023 இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.