மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை.. மாதம் ரூ.142400/- ஊதியம்!

0
36
#image_title

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை.. மாதம் ரூ.142400/- ஊதியம்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள Junior Hindi Translator,Junior Translator மற்றும் Senior Hindi Translator உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த மூன்று பதவிகளுக்கும் மொத்தம் 307 காலிப்பணியிடங்கள் உள்ளன.இப்பணிகளுக்கு தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக 12-09-2023 வரை வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசு வேலை

நிறுவனம்: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(SSC)

பணி:

1.Junior Hindi Translator

2.Junior Translator

3.Senior Hindi Translator

காலிப்பணியிடங்கள்: JHT பதவிக்கு மொத்தம் 307 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழத்தில் ஏதேனும் ஒரு துறையில் Master‟s degree முடித்திருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.மத்திய அரசின் விதிகளின்படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

Junior Translation Officer(JTO)/ Junior Hindi Translator (JHT) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

Senior Hindi Translator(SHT) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

Step 1: Paper- I – Computer Based Mode (Objective Type)

Step 2: Paper- II – Descriptive

Step 3: Document Verification (DV)

விண்ணப்ப கட்டணம்:

GEN/OBC/EWS பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100/- என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SC/ST/PWD/Ex-servicemen பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தில் முறையான விவரங்களை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 12 இறுதி நாள் ஆகும்.