7 பேரவைகளின் இடைத் தேர்தல்!!! வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கியது!!!

0
73
#image_title

7 பேரவைகளின் இடைத் தேர்தல்!!! வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கியது!!!

மேற்கு வங்கம், கேரளம், உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட், திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய 6 மாநிலங்களை உள்ளடக்கிய 7 பேரவைகளுக்கு நடந்து முடிந்த இடைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று(செப்டம்பர்8) தொடங்கியுள்ளது.

கேரளா மாநிலத்தின் புதுப்பள்ளி, ஜார்கண்ட் மாநிலத்தின் தும்ரி, மேற்கு வங்க மாநிலத்தின் துப்குரி, உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் கோஷி, உத்தரகண்ட் மாநிலத்தின் பாகேஸ்வர், திரிபுரா மாநிலத்தின் தன்பூர், பாக்ஸாநகர் ஆகிய பகுதிகளில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.

கேரளா மாநிலத்தில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அவர்கள் சமீபத்தில் மறைந்தார். அதனால் அவருடைய கோட்டையாக இருந்த புதுப்பள்ளி நகரத்திற்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

புதுப்பள்ளி நகரத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னனி சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அவருடைய மகன் சாண்டி உம்மன் அவர்கள் போட்டியிட்டார். மேலும் புதுப்பள்ளி நகரத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி கட்சி சார்பாக ஜெய்க் சி தாமஸ், பாஜக கட்சி சார்பாக கோட்டயம் மாவட்ட தலைவர் லிஜின்லால் ஆகியோர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். இவர்களில் யார் வெற்றி பெற்றவர் என்பது இன்று(செப்டம்பர் 8) தெரிய வரும்.

கேரளாவை போல உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் கோஷி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பாஜக கட்சி சார்பாக தாரா சிங் சௌஹான் அவர்களும் சமாஜ்வாதி கட்சி சார்பில் சுதாகர் சிங் அவர்களும் போட்டியிட்டனர். சுதாகர் சிங் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் ஆதரவு அளித்தது.

மேலும் மேற்குவங்க மாநிலம் துப்குரி தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பாக நிர்மல் சந்திர ராய் அவர்களும், காங்கிரஸ், இடது சாரி கூட்டணி சார்பாக ஈஸ்வர் சந்திர ராய் அவர்களும், பாஜக கட்சி சார்பாக தபசி ராய் அவர்களும் போட்டியிட்டனர். பாஜக வேட்பாளர் தபசி ராய் அவர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சி.ஆர்.பி.எப் வீரரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் சில தொகுதிகளின் முன்னிலை நிலவரங்களும் கிடைத்துள்ளது. இன்று(செப்டம்பர்8) வாக்கு எண்ணிக்கையின் முடிவில் யார் வெற்றி பெற்றார் என்பது பற்றி தெரிய வரும்.