தோனியின் சாதனையை முறியடித்த அக்ஸர் படேல்… சாதனை இன்னிங்ஸ்!

Photo of author

By Vinoth

தோனியின் சாதனையை முறியடித்த அக்ஸர் படேல்… சாதனை இன்னிங்ஸ்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் நேற்றைய போட்டியில் அதிரடி அரைசதம் அடித்து கலக்கியுள்ளார்.

ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாடி வெஸ்ட் இண்டீஸில் தற்போது ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவர் வரை பரபரப்பாக செல்ல, இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து நேற்று இரண்டாவது போட்டி நடந்தது. அதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்கள் சேர்த்து வலுவான இலக்கை நிர்ணயித்தது.அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரார் ஷாய் ஹோப் சதமடித்து அசத்தினார். அதன் பின்னர் கடினமான இலக்கோடு தொடங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது.

ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் கை ஓங்க, கடைசி நேர அதிரடியில் இறங்கிய அக்ஸர் படேல் இந்திய அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அவர் 35 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இதன் மூலம் இந்திய 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

அக்ஸர் படேலின் இந்த அதிரடி இன்னிங்ஸில் 3 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடக்கம். இந்திய அணியில் சேஸிங்கின் போது 7 ஆவது வீரராகக் களமிறங்கிய அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களாக தோனி மற்றும் யூசுஃப் பதான் (தலா 3 சிக்ஸர்கள்) இருந்தனர். தற்போது அவர்களின் சாதனையை அக்ஸர் படேல் முறியடித்துள்ளார். இதையடுத்து அவருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.