தினமும் வாகனம் ஓட்டி முதுகு வலி வருதா?? இந்த ஒன்று போதும் அனைத்து வலிகளுக்கும் ஒரே தீர்வு!!
பலரின் வேலையானது வாகனத்தை சார்ந்து உள்ளது. தினந்தோறும் வாகனத்தை ஓட்டும் படியான வேலை செய்பவர்களுக்கு அதிக அளவு முதுகு வலி ஏற்படும். முதுகு தண்டுவடம் வலுவிழந்து தினமும் இரவு தூங்க கூட முடியாத நிலைமையை உண்டாக்கும்.
அந்த வகையில் வாகனம் ஓட்ட அவர்களின் முதுகு வலியை போக்க இந்த ஒரு டிப்ஸை ஃபாலோ செய்தால் போதும். முதுகு வலி 48 நாட்களிலேயே காணாமல் போய்விடும். இது செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி, பாசிப்பருப்பு முருங்கைக்கீரை, மிளகு ,சீரகம், வெந்தயம் ,ஏலக்காய் ,சுக்கு ,உப்பு தேவையான அளவு உப்பு.
பச்சரிசி ஒத்துக் கொள்ளாதவர்கள் வேறு ஏதேனும் சிகப்பு அரிசி அல்லது சாப்பாட்டு அரிசி உபயோகித்துக் கொள்ளலாம். முருங்கை கீரை இரும்பு சத்து மிக்கது. நமது எலும்புகளுக்கு நல்ல பலன் தரும். அதேபோல பாசிப்பருப்பு வெந்தயம் இரண்டும் குளிர்ச்சியை உண்டாக்கும். தினந்தோறும் வண்டியில் பயணிப்பதால் ஏற்படும் சூட்டை குறைக்க உதவும்.
ஒரு கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் ஊற்றி இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இது நன்றாக மசிந்து காணப்படும்.
அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தினந்தோறும் காலை அல்லது மாலை ஒரு கப் சாப்பிட்டு வர வேண்டும். இதனை 48 நாட்கள் சாப்பிட்டு வர முதுகு தண்டுவடம் பலமடைந்து வலிகள் அனைத்தும் காணாமல் போகும்.