ரிக்டர் அளவில் மோசமான நிலநடுக்கம்

Photo of author

By Parthipan K

பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை 5.30 மணிக்கு ஏற்பட்டுள்ளது. தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் தெரிவித்துள்ள தகவலின்படி அந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதியான மணிலாவிலிருந்து தென்கிழக்கில் 451 கி.மீ. தொலைவில் இருந்ததாகவும் கடலுக்கு மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் பல கட்டிடங்கள் உள்ளிட்டவை பயங்கரமாக அதிர்ந்தன. இதனால் மக்கள் பயத்தில் வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை