பள்ளியில் வெடிகுண்டு மர்ம நபர் செய்த பகீர் காரியம்!! அவதிக்குள்ளான மாணவர்கள்!!

Photo of author

By Amutha

பள்ளியில் வெடிகுண்டு மர்ம நபர் செய்த பகீர் காரியம்!! அவதிக்குள்ளான மாணவர்கள்!!

Amutha

bagheer-kariya-done-by-bomb-suspect-in-school-suffering-students

பள்ளியில் வெடிகுண்டு மர்ம நபர் செய்த பகீர் காரியம்!! அவதிக்குள்ளான மாணவர்கள்!!

பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கிளம்பிய தகவலால் அச்சமடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை பள்ளியை விட்டு துரிதமாக வெளியேற்றினார்கள்.

பரபரப்பை கிளப்பிய இந்த சம்பவத்தின் பின்னணியில் முகம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அனுப்பிய ஈமெயில் செய்தியே காரணம் என தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று காலையில் தனியார் பள்ளியின் முகவரிக்கு ஈமெயில் ஒன்று வந்துள்ளது. அதனை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

அந்த தகவலில் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் கடும் அச்சத்திற்கு உள்ளான பள்ளி நிர்வாகத்தினர் இந்த தகவலை உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவித்தனர்.

சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் உடனடியாக பள்ளிக்குச் சென்ற போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் பள்ளியின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமான சோதனையை மேற்கொண்டனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள மைதானத்தில் பாதுகாப்பாக அமர வைக்கப்பட்டனர். திடீரென வெடிகுண்டு வதந்தி பரவிய நிலையில் தங்கள் பிள்ளைகளுக்கு என்னானதோ என்ற பதட்டத்தில் அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோரும் கூடியதால்  பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

பின்னர் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி எனவும் யாரோ மர்ம நபர் வேண்டுமென்று இந்த ஈமெயில் தகவலை அனுப்பி அனைவரின் நேரத்தையும் வீணடித்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை பற்றிய தகவல்களை சேகரித்து வருகின்றனர்.