பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு பிடிவாரண்டா?

Photo of author

By Parthipan K

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு பிடிவாரண்டா?

Parthipan K

நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் 3 முறை பிரதமர் பதவியில் இருந்தவர் (வயது 70). இவர் மீது 34 ஆண்டு கால நில ஒதுக்கீடு ஊழல் வழக்கு, லாகூர் ஊழல் தடுப்புகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு கடந்த மாதம் கோர்ட்டு சம்மன் அனுப்பியது. அந்த வழக்கு லாகூர் ஊழல் தடுப்பு கோர்ட்டில் நீதிபதி ஆசாத் அலி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நவாஸ் ஷெரீப், பாகிஸ்தானில் இல்லை என்ற தகவலை மாதிரிநகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பஷீர் அகமது தெரிவித்தார்.

நவாஸ் ஷெரீப் கட்சியின் மூத்த தலைவர் அட்டா தரார், நவாஸ் ஷெரீப் 6 மாதங்களாக வெளிநாட்டில் இருப்பதாக உறுதி செய்தார். உடனே அரசு தரப்பு சிறப்பு வக்கீல் ஹாரீஸ் குரேஷி, நவாஸ் ஷெரீப்பை கைது செய்து ஆஜர்படுத்துவதற்காக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதை ஏற்ற நீதிபதி ஆசாத் அலி, நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றுமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.