சேலத்தில் மூங்கில் கடத்தல்! கூலித்தொழிலாளி கைது!

Photo of author

By Rupa

சேலத்தில் மூங்கில் கடத்தல்! கூலித்தொழிலாளி கைது!

Rupa

Bamboo smuggling in Salem! Laborer arrested!

சேலத்தில் மூங்கில் கடத்தல்! கூலித்தொழிலாளி கைது!

உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் மூங்கில் மரங்களை வெட்டுவது தவறு. அவ்வாறு அனுமதி இன்றி வெட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். மேலும் அதற்கேற்றார் போல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். சேலம் மாவட்டத்தில் கோரிமேடை தாண்டி உள்ள குருவம்பட்டி பகுதியைஏற்காட்டின் அடிவாரம் என்று கூறுவர். சமீப காலமாக சில மர்ம நபர்கள் அங்குள்ள மூங்கில் மரங்களை வெட்டி கடத்தி செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

அவ்வாறு கடத்தி செல்வது குறித்து அங்குள்ள மக்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தி அவர்களை கண்டுபிடித்தனர். அதேபோல சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் மூங்கில் மரங்களை வெட்டி வந்துள்ளனர். ஓமலூர் தேக்கம்பட்டி என்ற பகுதியில் அதிகப்படியான மூங்கில் மரங்கள் உள்ளது. சிலர் இரவு நேரங்களில் மூங்கில் மரங்களை வெட்டி கடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இது குறித்து பலர் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்ததன் பெயரில் வனத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் கிட்டத்தட்ட 48 மூங்கில் மரங்களை வெட்டி கடத்தியது தெரியவந்தது. மேலும் இந்த மரங்களை வெட்டி கடத்தி வந்தவர் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான சேகர் என்பதை கண்டுபிடித்தனர். அவரை கைது செய்த சிறையில் அடைத்துள்ளனர்.