ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பு… இன்று விசாரணைக்கு வந்த வழக்கு…
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் இன்று(ஆகஸ்ட்7) விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பல வாதங்களை முன்வைத்துர். குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை வித்தது அரசின் கொள்கை முடிவு என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் காரணமாக தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால் தற்கொலைகளை தடுக்கும் விதத்தில் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டாங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றியது. மேலும் ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட்7) விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாக தமிழக அரசு இந்த விளையாட்டை தடை விதித்துள்ளது. இது அரசின் கொள்கை ரீதியான முடிவு ஆகும். ரம்மி விளையாட்டை நேரடியாக விளையாடும் பொழுது தான் அந்த விளையாட்டை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். ஆனால் ஆன்லைனில் ரம்மி விளையாட்டை தயார் செய்த தொழில்நுட்ப வல்லுநர்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியுள்ளனர். ஆன்லைனில் விளையாடுவோர்களின் சுய அறிவு எவ்வாறு சரிபார்க்கப்படுகின்றது என்று நிறுவனங்கள் விளக்கம் தருவது இல்லை.
அதுமட்டுமில்லாமல் ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் விளையாடி வெற்றி பெருபவர்கள் முழுத் தொகையையும் அவர்களே எடுக்க முடியாது. வெற்றி பெற்றவர்களின் தொகையால் ஒரு பகுதியை ஆன்லைன் நிறுவனங்கள் எடுத்துக் கொள்கின்றது.
ஆனால் நேரடியாக ரம்மி விளையாட்டை விளையாடும் பொழுது வெற்றி பெருபவர்கள் முழுத் தொகையையும் பெற்றுக் கொள்ள முடியும்” என்று வாதாடினார்கள்.
ஆன்லைன் ரம்மி வழக்கில் தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜென்ரல் சண்முகசுந்தரம் அவர்களும், மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கபில் சிபல் அவர்களும் ஆஜரானார்கள். ஆன்லைன் ரம்மி தடை விதித்தது தொடர்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் மாதம் 14ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.