வங்காளதேசம் பேட்டிங்! 227 ரன்களில் ஆல்அவுட் – ஆதிக்கம் செலுத்துமா இந்தியா?

Photo of author

By Amutha

வங்காளதேசம் பேட்டிங்! 227 ரன்களில் ஆல்அவுட் – ஆதிக்கம் செலுத்துமா இந்தியா?

டாக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெல்லுமா? இந்தியா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வங்காளதேசம் சென்றுள்ளது. ஒருநாள் போட்டியை வங்காளம்  3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை தன்வசமாக்கியது.இந்நிலையில் சட்டோகிராமில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டு இன்னிங்க்ஸ் லேயும் வெற்றி பெற்றது.

188  ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற வங்காளதேசம் ஃபாலோ ஆன் ஆனது. இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று டாக்காவில் நடைபெற்று வருகிறது.முதலில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த வங்காளத்தின் தொடக்க ஆட்டக்காரர்கள்  இந்திய வீரர்களின் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் 25 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை பறி கொடுத்தனர்.

அடுத்து வந்த வீரர்கள் ஓரளவு சமாளித்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர். மொமினுல் 84  ரன்கள் மெஹிதி ஹசன் 51 ரன்களும் அதிக பட்சமாக எடுத்துள்ளனர். இன்று முதல் இன்னிங்க்ஸ் –இன் முதல் நாள் முடிவில் வங்காளம் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து தற்போது பேட்டிங் செய்து வரும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல்(3) மற்றும் சுப்மன் கில்(14) ஆகியோர் களத்தில் உள்ளனர்.இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா விளையாடவில்லை. குல்தீப் யாதவ் பதிலாக ஜெயதேவ் உனத்கட் சேர்க்கப்பட்டுள்ளார். முந்தைய ஆடுகளத்தை போலவே இந்த மைதானமும் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே சுழல் பந்துகளின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

வங்காளதேசம் இதுவரை இந்திய அணியை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வென்றது இல்லை. எனவே கடைசி வரை கடும் நெருக்கடி கொடுக்கவே அந்த அணி வீரர்கள் முயற்சி செய்வார்கள் .உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-க்கு உட்பட்ட போட்டி இது என்பதால் இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் முக்கியத்துவம் வாய்ந்தது. 55.77 புள்ளிகளினை பெற்று டெஸ்ட் தொடருக்கான புள்ளி பட்டியலில் இரண்டாவது இடம் வகிக்கும் இந்திய அணி அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வென்றாக வேண்டும் என முனைப்பில் உள்ளது.