பத்து நிமிடத்தில் 100000 ரூபாய் மாயம்! கதறிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர்!

Photo of author

By Kowsalya

பத்து நிமிடத்தில் 100000 ரூபாய் மாயம்! கதறிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.

வங்கி மேலாளர் எனக் கூறி ஒரு லட்சம் ரூபாயை அரசு ஓய்வுபெற்ற ஊழியரிடம் கைவரிசை.

சென்னை கோட்டூர்புரம், எல்லையம்மன்கோயில் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் ஓய்வு பெற்ற டிஎன்பிசி ஊழியர். இவர் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி அன்று வங்கி மேலாளர் பேசுகிறேன் என கூறி போன் கால் ஒன்று வந்துள்ளது.இதனை அடுத்து தொடர்ந்த நபர் ஏடிஎம் கார்டு காலாவதி ஆகி விட்டதால் மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

மீண்டும் ஏடிஎம் கார்டு நம்பர்களை கேட்டு தெரிந்து உள்ளார்.

எதுவும் தெரியாத சதாசிவம் முன்பக்க மற்றும் பின்பக்கம் உள்ள அனைத்து எண்களை சொல்லியுள்ளார். மேலும் உங்கள் போனிற்க்கு ஒரு குறுஞ்செய்தி வரும் அந்த குறுஞ்செய்தியில் உள்ள எண்களை சொல்லுங்கள் என அந்தப் பக்கம் அவன் கூறியுள்ளான் இவரும் SMS-ல் வந்த எண்களை கூறியுள்ளார். நொடியில் ஒரு லட்சம் ரூபாய் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என SMS அவருக்கு வந்துள்ளது.

பதறிப்போய் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்த சதாசிவம் அப்போதுதான் உணர்ந்தார் அவருக்கு போன் செய்து வங்கி மேலாளர் இல்லை திருட்டு கும்பல் என்று.

பின் சதாசிவம் தனது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்திளோடு அருகில் உள்ள கோட்டூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்து புகார் செய்துள்ளார். அதில் அவருக்கு 1,03,000 ரூபாய் திருடப்பட்டது என கூறியுள்ளார்.அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அந்த வங்கி மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

மீண்டும் அதே மாதிரியான மற்றொரு கும்பல் 17ம் தேதி அவருக்கு போன் செய்து மறுபடியும் உங்கள் ஏடிஎம் கார்டு காலாவதியாகிவிட்டது என்று மறுபடியும் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சதாசிவம் “ஏனடா இப்படி ஏமாத்தறீங்க” என்று திட்டிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதைப் பற்றி அவர் கூறியதாவது “எனக்கு வயதாகி விட்டதால் வங்கியிலிருந்து மேலாளர் பேசுகிறேன் என்று கூறியதால் நம்பி முழு விவரத்தையும் கொடுத்து விட்டேன் ஆனால் என்னை ஏமாற்றி விட்டார்கள்” என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், “வங்கி மோசடி கும்பல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் தொடர்ந்து மக்கள் ஏமாந்துவருகின்றனர்.

வடமாநிலங்களைச் சேர்ந்த ஒரு திருட்டு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டுவருகிறது.

தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

எனவே வங்கி தொடர்பான போன் அழைப்புகளை மக்கள் நம்ப வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளனர்.

ஒரே நாளில் சென்னையில் மூன்று பேரிடம் வங்கி மோசடி கும்பல் பணத்தை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.