ஜூன் மாதத்தில் மிக குறைவான நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை கிடைத்தனர். இந்த நிலையில் ஜூலை மாதம் 14 நாட்கள் விடுமுறை கிடைக்கவிருக்கிறது.
இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற தனியார் மற்றும் பொது வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இந்த மாதம் அதிக விடுமுறை இருப்பதால் வங்கிப் பணிகளை முன்னதாகவே திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சற்றேறக்குறைய ஜூன் மாதம் நிறைவடைய இருக்கின்ற நிலையில் மிக விரைவில் ரிசர்வ் வங்கி தயார் செய்த நாள் காட்டியின் படி ஜூலையில் புதிய வங்கி விடுமுறைகள் அவளுக்கு வரவிருக்கின்றன வார இறுதி நாட்களை தவிர்த்து நாட்டின் பல்வேறு நகரங்களில் ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டர் நிகழ்ச்சிகள் வித்தியாசமாக இருக்கும். நாட்டில் வங்கி விடுமுறைகள் negotiate instrument act real time gross settlement, clossing of bank accounts என மூன்றாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் திருவிழாக்களை பொறுத்து பல சந்தர்ப்பங்களில் பல கிளைகள் மூடப்பட்டிருக்கும் இதை தவிர்த்து தேசிய விடுமுறை நாட்களில் தேசிய அளவில் வாங்கி விடுமுறைகள் இருக்கின்றன. இதனால் தனியார் மற்றும் பொதுத் துறையில் இருக்கின்ற அனைத்து கிளைகளும் மூடப்பட்டிருக்கும்.
அனைத்து பொதுத்துறை வெளிநாட்டு வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் பிராந்திய வங்கிகளின் கிளைகள் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலின் அடிப்படையில் ஜூலை மாதத்தில் வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் இதில் 7 வார விடுமுறை அடங்கும்.
மீதமுள்ள நாட்கள் பிராந்திய விடுமுறைகள் அதாவது அந்தந்த மாநிலங்களுக்கான விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களாகும். பல வங்கி விடுமுறைகள் சாந்தியமானது. மற்றும் மாநிலத்திற்கு மாநிலம் மற்றும் வங்கிக்கு வங்கி வேறுபடலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
இதைத்தவிர வார விடுமுறைகளான 7 நாட்கள் உள்ளனர், பிராந்திய விடுமுறையான பக்ரீத் ஜூலை மாதம் 9ம் தேதி வருகிறது. இது அனைத்து வங்கிகளும் மூடப்படும் 2வது சனிக்கிழமையாகும்.
ஜூலை 2022 வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல் இதோ.
Negotiable Instruments Act விடுமுறை:
ஜூலை 1: காங் (ரதஜாத்ரா)/ ரத யாத்திரை – புவனேஷ்வர்
ஜூலை 7: கர்ச்சி பூஜை – அகர்தலா
ஜூலை 9: இத்-உல்-அதா (பக்ரித்) – கொச்சி, திருவனந்தபுரம்; இது மாதத்தின் 2வது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளும் மூடப்படும்
ஜூலை 11: ஈத்-உல்-அஷா – ஸ்ரீநகர், ஜம்மு
ஜூலை 13: பானு ஜெயந்தி – கேங்டாக்
ஜூலை 14: Beh Dienkhlam – ஷில்லாங்
ஜூலை 16: ஹரேலா – டேராடூன்
ஜூலை 26: கேர் பூஜை – அகர்தலா
ஒரே நாளில் 2 வகையான விடுமுறைகள் வருவதால் ஜூலை மாதம் 9ம் தேதி வங்கி விடுமுறை ஒரு நாளாக தான் கணக்கில் கொள்ள வேண்டும். அப்படி பார்த்தோமானால் ஜூலையில் 14 விடுமுறைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
ஆகவே வங்கி வாடிக்கையாளர்கள் ஜூலை மாதத்தில் ஏதாவது முக்கியமான வங்கி பணிகள் இருந்தால் உடனடியாக உங்களுடைய கிளை மேலாளரை தொடர்பு கொண்டு வங்கி இயங்கும் நாளை உறுதி செய்து கொள்ளுங்கள். அல்லது முன்னதாகவே வங்கி வேலைகளை முடிப்பதற்கான திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.