அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் வசித்து வரும் பாலசுப்பிரமணியம் என்பவர் ,அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் அடுத்த யுத்தபள்ளம் பகுதியை சொந்த ஊராகும்.இவர் கடந்த 15 வருடமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கிக் கணக்கு வைத்து வரும் வாடிக்கையாளராக உள்ளார்.
இந்நிலையில், ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் அருகிலுள்ள பாலசுப்ரமணியத்தின் இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து, கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோன் கேட்டு அங்கே சென்றுள்ளார்.
ஆனால், அங்கு பணிபுரியும் மேலாளராக வேலை செய்தவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அவரிடம் சென்ற பாலசுப்ரமணியம் தனது இடம் சம்பந்தமான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து வங்கியில் கடன் கேட்டுயுள்ளார்.
அப்பொழுது வங்கி மேலாளர், உங்களுக்கு ஹிந்தி தெரியுமா? என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். அதற்கு பாலசுப்பிரமணியம் எனக்கு ஹிந்தி தெரியாது, ஆனால் தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியும் என்று ஆங்கிலத்தில் பதிலளித்தார் .அதற்கு வங்கி மேலாளர் நான் மகாராஷ்டிராவை சேர்ந்தவன். எனக்கு ஹிந்தி தெரியும், இது மொழி பிரச்சனை என தெரிவித்து சுப்பிரமணியத்தின் ஆவணத்தை நிராகரித்தார். பாலசுப்பிரமணியம், தனது ஆவணத்தை காண்பித்து உங்கள் கிளையில் தான் நான் பல வருடங்களாக கணக்கு வைத்துள்ளேன் என்று கூறியும் ,மொழியை காரணம் காட்டி கடன் கொடுக்க இயலாது என்று மேலாளர் பாலசுப்பிரமணியனை திருப்பி அனுப்பியுள்ளர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாலசுப்பிரமணியம் வங்கி மேலாளர்கள் மீது மான நஷ்ட ஈடு கேட்டு கடந்த 12-ஆம் தேதி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.இதற்காக நீதிமன்றம் செல்ல போவதாகவும் தெரிவித்தார்.
கங்கை முதல் கடாரம் வரை சென்று போரிட்டு வென்ற ராஜேந்திர சோழனின் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்தி தெரியாது என்பதனால் கடன் கிடையாது என்று கூறிய வங்கி மேலாளர் பாலசுப்ரமணியனை வேதனைப் படுத்தியதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.