தமிழகத்தில் தியேட்டர்கள் ஓபன்!பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகள்!

0
77

கொரோனோ பெரும் தொற்றின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டு கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் உள்ளது.இதில் மிக முக்கியமான துறை திரைத்துறை ஆகும்.

கொரோனோ தாக்கத்தின் காரணமாக ஆறு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் மூடியே இருக்கின்றன.தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனோவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பி வரும் இந்த வேலையில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட சில விதிமுறைகளை தமிழகத்திலுள்ள திரையரங்குகள் தெரிவித்துள்ளன.இதற்கான விதிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த  அக்டோபர்  மாதத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளிவரும் என்றும் தெரிவிக்கின்றனர்.

திரையரங்குகள் திறக்கப்பட உள்ள விதிமுறைகள்:

1.ஒரு ஷோவிற்கு அதிகபட்சம் 40 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் மட்டுமே படம் பார்க்க முடியும்.

2.திரையரங்கின் உள்ளே அதற்கு முன் அவர்களிடம் சோதனை செய்ய வேண்டும்.

3.ஒரு சீட்டுக்கும் மற்றொரு சீட்டுக்கும் இடைவெளி இருக்க வேண்டும்.

4.ஒரு நாளில் மொத்தம் மூன்று ஷோக்களுக்கு மட்டுமே அனுமதி .அதிலும் ஒரு ஷோ முடிந்து அடுத்த ஷோ வருவதற்கு ஒன்றரை மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.

author avatar
Parthipan K