பேனரால் ஏற்பட்ட கலவரம்! படத்தை நிஜமாக்கிய உண்மை சம்பவம்!  

Photo of author

By Rupa

பேனரால் ஏற்பட்ட கலவரம்! படத்தை நிஜமாக்கிய உண்மை சம்பவம்!

இந்த கொரோனா தொற்று காலத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூட தயங்குகின்றனர்.ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஏற்பட்ட கலவரம் அம்மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.உளுந்தூர்பேட்டை அருகே இறையூர் என்ற கிராமம் உள்ளது.அந்த கிராமத்தில் சிறு தினங்களுக்கு முன் ராஜி என்பவருக்கு திருமணம் நடைபெற்றது.திருமணத்தில் பேனர்கள் வைக்க கூடாது என்ற சட்டம் இருந்தாலும் கிராம பகுதிகளில் இன்றளவும் அந்த பழக்கத்தை கைவிட வில்லை.

இவர் திருமணத்தில் பேனர் வைப்பது குறித்து ஜெய்சன் மற்றும் அலெக்ஸ்சாண்டர் என்பவருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது.இந்த பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு ஜெய்சன் மற்றும் அவரது நண்பர்கள் அலெக்ஸ்சாண்டரை பழி வாங்கும் நோக்கத்தில் இருந்துள்ளனர்.நேற்று இரவு அலெக்ஸ்சாண்டர் மட்றும் அவரது நண்பர்கள் ஊர் முனையில் பேசி கொண்டிருந்தனர்.இரவு நேரம் என்பதால் அக்கம் பக்கம் யாரும் நடமாட்டம் இல்லாதிருந்தது.ஜெய்சன் இதனை தன் வயம் படுத்திக்கொண்டுள்ளார்.

ஜெய்சன் மற்றும் அவரது நண்பர்கள் இரும்பு,மரம் போன்ற கட்டைகளை எடுத்துக்கொண்டு அலெக்ஸ்சாண்டர் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.தாக்கும் போது ஏற்பட்ட அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இவர்களை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் தாக்கியவர்கள் தப்பி ஓடி விட்டனர்.அதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது நடந்த மறுநாளே அலெக்ஸ்சாண்டர் தரப்பு சேர்ந்தவர்கள் ஜெய்சன் மற்றும் அவரது நன்பர்களை தாக்க பெரிய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.இவர்கள் வருவதை முன்கூட்டியே தெரிந்த ஜெய்சன் தலைமறைவாகியுள்ளார்.அவர்கள் வீட்டில் இல்லை என்ற கோவத்தில் அலெக்ஸ்சாண்டர் தரப்பை சேர்ந்தவர்கள் அவரது வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.அதனையடுத்து ஜெய்சனுக்கு ஆதரவு தெரிவித்தவரின் வீட்டையும் தாக்கியுள்ளனர்.அதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.கலவரத்தில் ஈடுபட்ட இரு கும்பலும் தற்போது தலைமறைவாகியுள்ளது.போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.மேற்கொண்டு அந்த கிராமத்தில் ஏதும் கலவரம் நடக்காமலிருக்க கண்காணிப்பு போலீசார் அதிகப்படியானோர் போடப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் படத்தில் நடப்பது போலவே தினசரி வாழ்வில் நடந்துள்ளது என்பது மற்ற மாவட்ட மக்களை வியப்படைய செய்கிறது.அதுமட்டுமின்றி இந்த கலவரத்தினால் ஊர் பொது மக்கள் பெருமளவு பீதியில் உள்ளனர்.