தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதித்தது தவறு!! பிரபல இயக்குநர் பேட்டி!!

Photo of author

By Sakthi

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதித்தது தவறு!! பிரபல இயக்குநர் பேட்டி!!

Sakthi

Banning the movie The Kerala Story was wrong!! Famous Director Interview!!
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதித்தது தவறு!! பிரபல இயக்குநர் பேட்டி!!
இந்தியாவில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு ஆதரவாக பிரபல இயக்குநர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு தடை விதித்தது தவறு என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் நடிகைகள் அடா சர்மா, சித்தி இட்னானி, யோகிதா பிஹானி, சோனியா பிஹானி ஆகியோரது நடிப்பில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. இந்த திரைப்படத்திற்கு ஆதரவாகும் எதிராகவும் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இயக்குநர் அனுராக் கஷ்யப் அவர்கள் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இயக்குநர் அனுராக் கஷ்யப் அவர்கள், “தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதித்தது தவறான செயல். படத்தை நீங்கள் ஆதரிக்கலாம். அல்லது எதிர்க்கலாம். ஆனால் தடை விதிப்பது என்பது தவறான செயல்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.