அத்தியாவசிய பொருட்கள் குறிப்பிட்ட நேரத்தில் தான் கிடைக்கும் : வெளியான அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் இதுவரை 21 ஆயிரம் பேரின் உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்த நோய் இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதில் முதல் கட்டமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு மக்களை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவது பலருக்கு நோய் தொற்று ஏற்பட காரணமாகிவிடுகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் பொது இடங்களில் சுற்றி திரிவதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு அரசு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் நேரங்களை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் திறக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது;
காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 9 வரை செயல்படும்.
மளிகை கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும்.
உணவகங்கள் காலை 7 மணி முதல் 9 மணி வரை செயல்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் கூட்ட நெரிசலால் கொரோனா பரவுவதை ஒரளவு கட்டுபடுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.