உஷாரா இருந்துக்கோங்க பொதுமக்களே? தத்ரூபமாக ஏடிஎம்மில் கொள்ளை அடித்த இரு நபர்!

0
190
Be alert public? Two people actually robbed an ATM!
Be alert public? Two people actually robbed an ATM!

உஷாரா இருந்துக்கோங்க பொதுமக்களே? தத்ரூபமாக ஏடிஎம்மில் கொள்ளை அடித்த இரு நபர்!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவனந்தன் இவருடைய வயது 22. அதே பகுதியைச் சேர்ந்தவர் தான் கதிரவன் வயது 30. இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆவர். இருவரும் சேலம் மாவட்டத்திலுள்ள  பல்வேறு இடங்களில் வங்கி ஏடிஎம் இயந்திர மையங்களுக்கு அருகில் நின்று கொண்டு பணம் எடுப்பது போல் ஆக்சன் செய்து கொண்டிருப்பார்கள்.

ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் பெண்களிடம் எளிதில் நான் எடுத்து தருவதாக கூறி அட்டைகளை வாங்கிக் கொண்டு பணம் எடுத்து குடுத்து விட்டு பிறகு  அதே போன்று போலி அட்டைகளை கொடுத்து விடுவார்கள்.

இதையும் நம்பி மக்கள் வாங்கிகொண்டு செல்வார்கள்.அவர்கள் அங்கிருந்து சென்றதும் ஒரிஜினல் ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி அவர்களின் ஒட்டுமொத்த பணத்தையும் எடுத்து ஓடி விடுவார்கள்.இதேபோல் சென்ற ஆண்டும் எடப்பாடியில் முதியவர்களிடம் ஏடிஎம் மூலம் பணம் எடுத்துக் கொடுப்பது போல நடித்து ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாழப்பாடி பகுதியில் வியாழக்கிழமை அன்று போலிசார்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் பிறகு தான் இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 38 ஏடிஎம் அட்டைகள் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் எடப்பாடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே ஏடிஎம்மில் பணம் எடுக்கத் தெரியாதவர்கள் தன் உறவினர்களை அழைத்துச் செல்லுமாறு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Previous articleதமிழகத்தில் ஊரடங்கு போடப்படும் நிலையா? அதிகரிக்கும் கொரோனா!
Next articleசேலம் மாவட்டத்தில் நான்கு லட்சம் பண மோசடி! அரசு வேலை கனவாகிய நிலை!