அடுத்த பெரிய ஆபத்தை சந்திக்க தயாராக இருங்கள்

Photo of author

By Parthipan K

அடுத்த பெரிய ஆபத்தை சந்திக்க தயாராக இருங்கள்

Parthipan K

கொரோனா வைரசால் இந்த உலகமே பாதிக்கின்ற நிலையில் இந்த வைரசை இன்னும் முழுமையாக அழிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளது. அடுத்த பெருந்தொற்றை சிறப்பாக சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெட்ரோஸ் பெருந்தொற்றும், சமூகப்பரவலும் வாழ்க்கையில் உண்மையானவை என்பதை வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டுதான் உள்ளது. ஆனால், அடுத்த பெருந்தொற்று வரும் நேரத்தில் உலகம் தற்போதுள்ள தயார் நிலையை விட இன்னும் சிறப்பான சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்’ என்றார்.