பீஸ்ட் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிப்பவர் இவரா.? எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

Photo of author

By Vijay

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிப்பவர் இவரா.? எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

Vijay

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் அம்மா கேரக்டரில் நடித்து வரும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 75% முடிவடைந்துவிட்ட நிலையில் வரும் டிசம்பர் இறுதிக்குள் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷூட்டிங்கை தொடர்ந்து படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அடுத்த ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பீஸ்ட் படம் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு அம்மாவாக பிரபல செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு நடித்துள்ளதாக விபரம் வெளியாகியுள்ளது. முன்னதாக, இவர் அசோக்செல்வன் நடித்த ஓ மை கடவுளே படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.