தன் வீட்டின் அருகே ஆபாச பேச்சை பேசக்கூடாது என கண்டித்ததால்?. அவரை சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்!..

Photo of author

By Parthipan K

தன் வீட்டின் அருகே ஆபாச பேச்சை பேசக்கூடாது என கண்டித்ததால்?. அவரை சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்!..

Parthipan K

Because he was reprimanded not to speak obscenities near his house? The youths who attacked him barrage!..

தன் வீட்டின் அருகே ஆபாச பேச்சை பேசக்கூடாது என கண்டித்ததால்?. அவரை சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்!..

தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் பாண்டியன்.இவருடைய வயது 61 ஆகும். நேற்று இரவு இவரது வீட்டின் வாசல் அருகே குமார் வயது 19,கபில் வயது 21,ஷேவாக் வயது 19,அஜித் வயது 20 ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து நான்கு பேரும் ஆபாச பேச்சுகளை பேசத் தொடங்கினார்கள்.

பின் பாண்டியன் அவர்களை அழைத்து  இங்கு சிறு குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளார்கள் எனவே ஆபாச வார்த்தைகளை பேசக்கூடாது என கண்டித்துள்ளார். அதை கண்டுகொள்ளாத நான்கு பேரும் தொடர்ந்து கொச்சியான சொற்களை பேசத் தொடங்கியுள்ளர்கள். இந்நிலையில் கோபமடைந்த பாண்டியன் அவர்களை வாசலில் இருந்து வெளியேறச் சொன்னார்.

பின்னர் அந்த  நான்கு வாலிபர்களும் வ தகராறில்  ஈடுபட்டனர். இந்த சண்டை காரணமாக பாண்டியனை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார்கள். இதனால் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதனால் சற்று நேரத்தில் அவரின் உயிர் பிரிந்தது. இத்தகவலை அறிந்த பழனி செட்டிபட்டி போலீசார் அந்த நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.