குளிக்கும் முன் 1 டேபிள் ஸ்பூன் தேய்த்து குளித்து பாருங்க!! உடல் முழுவதும் பளபளன்னு மாறிவிடும்!!
மாசு, மறு, பரு நீங்கி அழகான சருமத்தை பெற வேண்டும் என்று தான் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின் விருப்பமாக இருக்கும்.
முகம் பொலிவுடன் இருக்க பலரும் பலவிதமான வழிகளை கடைபிடித்து வருகின்றனர், அதில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது கெமிக்கல் நிறைந்த கிரீம்கள் தான், இவை முகத்திற்கு தற்காலிகமான அழகை மட்டுமே கொடுக்கிறது,
நாளடைவில் அதிக சரும பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உண்மையை சொன்னால் நம்முடைய சருமம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருப்பதற்கு நாம் எதுவும் செய்ய வேண்டாம்.
அன்றாடம் செய்கின்ற சில விஷயங்களில் ஒரு சில மாற்றங்களை மேற்கொண்டாலே போதும்.எனவே இதனை செய்வதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.
தேவையான பொருட்கள்:
கசகசா
பச்சை பயிர்
பச்சரிசி
கடலைப்பருப்பு
செய்முறை:
1: ஒரு மிக்ஸி ஜாரில் 1 டேபிள்ஸ்பூன் கசகசா 2 டேபிள்ஸ்பூன் பச்சை பயிர் 2 டேபிள் ஸ்பூன் பச்சரிசி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
குழந்தைகளுக்கு இதனை பயன்படுத்தினால் இதனுடன் ரோஜா இதழ்களை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
2: ஒன்னு அல்லது ஒன்றை டேபிள்ஸ்பூன் இந்த பவுடரை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
இதனை பேஸ் பேக்காவும் யூஸ் பண்ணலாம் அல்லது உடல் முழுவதும் தேய்த்து குளிக்கலாம்.
நாம் பயன்படுத்திய இருக்கும் தயிரில் இயற்கையாகவே லாட்டிக் ஆசிட் உள்ளது எனவே முகத்தை வெள்ளையாக வைத்துக் கொள்ள உதவும் மற்றும் நம் முகத்தில் உள்ள கிருமிகளை நீக்கிவிடும்.
இதனை நம் உடம்பில் நன்றாக தேய்த்து விட வேண்டும் அப்பொழுதுதான் நம் உடம்பில் உள்ள டெத் சேல்ஸ் எல்லாம் வெளியேறும் மற்றும் நம் உடல் பளபளப்பாக இருக்கும்.
இதுவே நம் முகத்தில் தேய்த்தால் ஒரு இருபது நிமிடம் வைத்துக் கொண்டு பிறகு கழுவ வேண்டும்.எனவே இதனை நாம் பயன்படுத்தி வந்தால் நம் உடல் மற்றும் முகம் பளபளப்பாக வெண்மையாக இருக்கும்.