பென் ஸ்டோக்ஸ் எந்த ஒரு கேப்டனுக்கும் கனவு வீரராக இருப்பார் – கவுதம் காம்பிர்

0
182

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கவுதம் காம்பிர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ‘ஆல்-ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ் பற்றி பேசியுள்ளார். அதில் இந்தியாவில் தற்போது பென் ஸ்டோக்சுடன் ஒப்பிடக்கூடிய வீரர் இந்திய அணியில் தற்போது யார் இல்லை. ஏனெனில் இவர் தனித்துவமாக திகழ்கிறார். டெஸ்ட், ஒருநாள், ‘டுவென்டி-20’ போட்டிகளில் இவரது செயல்பாட்டை பார்க்கும் போது இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் யாரும் நெருங்க முடியாது.

பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்திலும் அசத்தி வருவதால் இவர் எந்த ஒரு கேப்டனுக்கும் இவர், கனவு வீரராக இருப்பார் என கவுதம் காம்பிர் புகழாரம் சூடியுள்ளார். இவர் சமீபத்தில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டியில் 313 ரன், 9 விக்கெட் கைப்பற்றி நல்ல ‘பார்மில்’ உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleநாளை மறுநாள் முதல் உணவகங்களில் உணவு உண்பதற்கும் தடை
Next articleமறைக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட போராளி அர்த்தநாரீச வர்மா