உலர்ந்த திராட்சையில் கறுப்பு திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, பச்சை திராட்சை, காபூல் திராட்சை, ஆங்கூர் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகைகள் உண்டு.
இதில், எந்த உலர்ந்த திராட்சையாக இருந்தாலும் நோய்களை குணப்படுத்தும் சக்தி உண்டு. குறிப்பாக, அல்சர் போன்ற வயிற்றுப்புண் மற்றும் குடல்புண் நோய்க்கு உலர்ந்த திராட்சை சிறந்த மருந்தாகும்.
தினமும் காலையில் உலர்ந்த திராட்சை பழச்சாறு குடித்து வந்தால் மருத்துவ சிகிச்சை இல்லாமல் வயிற்றுப்புண் மற்றும் குடல் புண் முழுமையாக குணமாகும். மேலும், மலச்சிக்கல், கை, கால் எரிச்சல் மற்றும் தலைச்சுற்றல் உள்ளவர்கள் திராட்சையை ஜூஸாகவோ, பழமாகவோ சாப்பிடலாம் மலச்சிக்கல் உள்ளவர்கள் உலர் திராட்சையை இரவு உறங்குவதற்கு முன் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் மறுநாள் அதன் பலன் கிடைக்கும்.
குறிப்பாக, பெண்களுக்கு கர்ப்பிணி காலத்தில் வாய் குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளவர்களுக்கு திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். மேலும், எடை குறைவாக இருப்பவர்களும், உடம்பில் சூடு அதிகமாக இருப்பவர்களும் திராட்சையை சாப்பிடலாம்.
இந்த உலர்ந்த திராட்சையில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளதால் எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு உலர்ந்த திராட்சை உதவுகிறது.
கருவில் வளரும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலமே கிடைக்கிறது. மேலும், மாதவிலக்கு காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி ஏற்படுகிறது. இதற்கெல்லாம் தீர்வாக உலர்ந்த திராட்சை சாப்பிடுவதால் நல்ல பயனைக் கொடுக்கிறது.