உணவு சாப்பிடும் போது கட்டாயம் இதை செய்யாதீர்கள்..!! ஆபத்தாகிவிடும்..!!

0
142
Wrong Food Combinations in Tamil

Wrong Food Combinations in Tamil: உணவு என்பது நமது அன்றாட வாழ்க்கையில் முக்கியமானதாக உள்ளது. நாம் உட்கொள்ளும் உணவானது ஆரோக்கிமாக இருந்தால் நமக்கு எந்த வித நோய்களுகும் ஏற்படாது. மேலும் சுவைக்காக மட்டும் இல்லாமல் ஆரோக்கியத்திற்காகவும் கட்டாயம் நாம் சாப்பிட வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் சுவைக்காக சுகாதாரமில்லாத உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள்.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் ஒரு குறிப்பிட்ட சத்துக்கள் இருக்கும். அப்படி இருக்கும் போது சில உணவுகளில் ஒரே மாதிரியான சத்துகளும், ஒரு சில உணவுகளில் வெவ்வேறு வகையான சத்துக்களும் கிடைக்கும். அந்த வகையில் நாம் உட்கொள்ளும் உணவை பார்த்து சாப்பிட வேண்டும். சில உணவுகளுடன் ஒரு சில உணவுகளை நாம் சேர்த்துக்கொள்ள கூடாது.

அவ்வாறு சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்பட்டு அது நோய்களை ஏற்படுத்தும். நாம் இந்த பதிவில் எந்த உணவுப்பொருட்களுடன் எந்த உணவை சேர்த்து சாப்பிடக் கூடாது என்று (Food Combining in tamil) பார்க்கலாம்.

சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள்

நாம் சாப்பிடும் உணவில் கட்டாயம் தயிர் எடுத்துக்கொள்வோம். அவ்வாறு தயிர் சாப்பிடும் போது முட்டை, சீஸ், பழங்கள், சூடான பானங்கள், முக்கியமாக மீன் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

பால் குடித்துவிட்டு இறைச்சி, மீன், தயில், வாழைப்பழம், முக்கியமாக புளிப்பு பழங்கள் சாப்பிடக் கூடாது. காரமான பொருட்கள் சாப்பிடக் கூடாது.

நம் உணவில் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் ஒரு உணவு என்றால் அது முட்டை, முட்டை சாப்பிட்டு விட்டு பால், தயிர், பழங்கள் சாப்பிடக் கூடாது.

முள்ளங்கி சாப்பிட்ட பிறகு பால், புளிப்பு பழங்கள், இறைச்சி சாப்பிடக் கூடாது.

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடவுடன் பழங்களையும், தானியங்களையும், முக்கியமாக மாம்பழம், வாழைப்பழம் சாப்பிடக் கூடாது.

பீன்ஸ் சாப்பிட்டும் போது, முட்டை, தயிர், மீன், இறைச்சி பால், பழங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இறைச்சியுடன் மைதாவால் செய்யப்பட்ட உணவை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இறைச்சி மற்றும் கீரை இவை இரண்டையும் சேர்த்து உண்ணக் கூடாது. செரிமானம் ஆகுவதற்கு சிக்கலாக மாறிவிடும் என்பதால் தவிர்த்துக்கொள்ளலாம்.

வெண்ணை மற்றும் காய்கறிகள் சேர்த்து உண்ணக் கூடாது.

இறைச்சி மற்றம் கிழங்கு இரண்டையும் சேர்த்து உண்ணக் கூடாது.

தேன் சாப்பிட்டுவிட்டு இறைச்சி சாப்பிடக் கூடாது.

மாவுச்சத்து நிறைந்த உணவுகள், புரதச்சத்து நிறைந்த உணவுகளுடன் ஒத்துப்போகாது. செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகும். எனவே இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளளவும்.

மேலும் படிக்க: அம்மா தோசைக்கு செய்ற இந்த கார துவையல் யாருக்கெல்லாம் பிடிக்கும்..!! 3 பொருள் போதும் சட்டுனு ரெடி பண்ணிடலாம்..!!