எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நாயுருவி -தினம் ஒரு மூலிகை

0
820

எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நாயுருவி -தினம் ஒரு மூலிகை

நமது கிராமப் புறங்களில் நாயுருவிச் செடிகளை பார்த்திருப்போம். அதில் இவ்வளவு நன்மைகளா என்று வியந்து பார்க்கும் அளவிற்கு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.பொதுவாக அதன் முட்போன்ற விதைகள் மனிதரில் உடம்பிலோ விலங்குகளின் உடலிலோ ஒட்டிக்கொண்டு வேறொரு இடத்தில் விழுந்து அங்கிருந்து முளைக்குமாம்.

இது பாறைகள் மற்றும் கற்களில் ஊடுருவிச் சென்று வளருமாம் இதனால் இதனை கல்லுருவி என்று கூறுவார்களாம்.

இயற்கை பேஸ்ட்:

இப்பொழுது எத்தனையோ நிறுவனங்கள் தங்களது பேஸ்டில் உப்பு எலுமிச்சை என கதை கூறி வருகிறார்கள். ஆனால் முற்காலத்தில் நமது முன்னோர்கள் நாயுருவி இலைகளின் வேர்களைக் கொண்டு பல் துலக்கி உள்ளனர். அவ்வாறு துலக்கும்போது பற்கள் வெண்மையுடன் பூச்சிகள் அண்டாமல் இருக்குமாம்.
கடுமையான பல் வலிக்கு நாயுருவி வேரை எடுத்து இடித்து கடுகு எண்ணெய் உப்பு சேர்த்து பல் துலக்கிவர வலி பறந்தே போகும்.
எதிர்மறை எண்ணங்களை போக்கும் தன்மையுடையது நாயுருவி.

யானை பலத்திற்கு:.

நாயுருவி அரிசிக்கு பசியை போக்கும் அபார ஆற்றல் உள்ளதாம்.இதன் அரிசியை உண்டால் இரண்டு நாட்களுக்குக் கூட பசியே எடுக்காது.
அந்த அளவிற்கு சுறுசுறுப்புடன் இருப்பார்கள். காட்டில் வாழும் சித்தர்கள் இதை உன்று வாழ்ந்தார்கள் என்று கூறப்படுகிறது.
மூங்கிலரிசி, தினையரிசி, நாயுருவி அரிசி மூன்றையும் சம அளவில் எடுத்து வறுத்து இடித்து வைத்துக்கொள்ள வேண்டும் இந்த எடுத்த பொடியை தினமும் கஞ்சி போல் காய்ச்சி குடிக்க வேண்டும் அவ்வாறு குடிக்கும் போது யானை பலம் கிடைக்கும்.

கண்ணாடியைக் கடிக்கலாம்

ஆறாத புண்கள் ,வெட்டுக் காயங்கள் ஆகியவற்றிற்கு நாயுருவி ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.100 கிராம் நாயுருவி இலையை எடுத்து 500 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைத்து அதை அரைத்து புண்களில் பற்றுப்போட விரைவில் மறையும்.
இந்த இலைகள் கண்ணாடியை அறுக்கும் பண்பு உள்ளதாம் சித்து வேலை செய்பவர்கள் இந்த இலையை அரைத்து தாடையில் வைத்துக் கொண்டு கண்ணாடியை அப்படியே கடித்து துப்புவார்கள். பயிற்சி இன்றி இதனை செய்ய வேண்டாம்.

சிறுநீரக பிரச்சனைக்கு:

சிறுநீர் பிரச்சனைகள் அனைத்திற்கும் நாயுருவி ஒரு சிறந்த தீர்வாகும். கதிர் விடாத நாயுருவி இலையை எடுத்து அரைத்து நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் அடைபட்டு சிறுநீர் பிரிந்து சிறுநீரகம் செயல்படும் வேகம் அதிகரிக்கும். நாயுருவி இலையை பற்றுப் போட நீர் கட்டு நீங்கும்.

இதன் இலையைப் பருப்புடன் சேர்த்து சமைத்து உண்ணும் பொழுது நாள்பட்ட சளி, நுரையீரலில் கட்டிருக்கும் சளி அனைத்தும் வெளியேறும்.

நாயுருவி இலைகளுடன் துளசி இலையை சம அளவில் எடுத்து உண்ணும் பொழுது பூச்சி, வண்டுக்கடி ஆகிய தோல் பிரச்சினைகள் சரியாகும்.

மலச்சிக்கல், தோல் நோய்களுக்கு அருமருந்து சிறுநீர் பிரச்சனை,புற்றுநோய் ஆகிய எண்ணற்ற பிரச்சினைகளுக்கு அருமருந்தாக நாயுருவி பயன்படுகிறது வீட்டில் அருகிலேயே இருக்கும் இந்த நாயுருவிச் செடியை கண்டால் விட்டுவிடாதீர்கள்.

Previous articleகர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி!
Next articleவிவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி!! ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ 50 ஆயிரம் மானியம்!!