விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி!! ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ 50 ஆயிரம் மானியம்!!

0
74

திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீதம் மானியமும்,ஒரு லட்சம் வரை வங்கி கடனும் பெறலாம் என அம் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி அவர்கள் கூறியுள்ளார்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியவாறு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான மானியத் தொகையும் கடனுதவியும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்படி வங்கிகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் தொகையையும்,50% மானியத்தையும் அதாவது அதிகபட்சமாக 50 ஆயிரம் வரை மானியத்தையும் பெறலாம்.இந்தத் திட்டத்தில் அனுமதி பெற சாதி சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ்,வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்று, கணினி வழி பட்டா,சிட்டா நகல் ஆகியவற்றை கொண்டு திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

author avatar
Pavithra