அழகான சருமத்திற்கு அம்சமான ஐந்து வழிகள்..!!
அனைவருக்கும் தன் உடல் அழகாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம்தான், அதிலும் தன்னுடைய முகத்தோற்றம் பார்ப்பதற்கு பளபளப்பாக கண்ணம் குவிந்து இருக்க வேண்டும் என்பதில் கூடுதலான எதிர்பார்ப்பு இருக்கும். இயற்கை வழியில் இதற்கான தீர்வுகளை கீழே பார்க்கலாம்.
அழகான சருமத்திற்கு 5 வழிகள் : Best 5 Beauty Tips for Skin in Tamil
∆ உடலின் அடிப்படை ஆரோக்கியத்திற்கும் பொதுவான தோற்றத்திற்கும் அடிப்படையாக இருப்பது நீர். நீர்தான் நம் உடல் தோலின் சருமத்தை வற்றாமல் பாதுகாக்கிறது. எப்போது தாகம் எடுத்தாலும் தண்ணீரை ( சுத்தமான குடிநீர் ) தேவையான அளவிற்கு பருகவும்.

∆ கன்னத்தில் தசை கூடுவதற்கு, தினமும் பச்சை வேர்க்கடலை ஒரு கைப்பிடி உண்ணுங்கள். (மொத்தமாக 40 ல் இருந்து 70 கடலை இருந்தால் போதுமானது) இதனால் சருமம் மென்மை அடைவதுடன் கன்னத்தில் தசை கூடும்.

∆ மென்மையான சருமத்திற்கு, ஒன்று அல்லது இரண்டு நாட்டு தக்காளியை பிழிந்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். தக்காளியுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவினாலும் முகத்தில் புதுப் பொலிவு கிடைக்கும். ( தடவிய பிறகு 20 நிமிடம் கழித்தே முகம் கழுவ வேண்டும் )
∆ மாதுளை & நாட்டு பப்பாளியை பழமாக உண்டால் ரத்த செல்கள் அதிகரித்து உடலின் மேல்புற தோல் பகுதியை மென்மையாக மாற்றுகிறது. மேலும் பப்பாளியை கூழாக்கி அதில் பால் கலந்து முகத்தில் தடவி வந்தாலும்
நல்ல மாற்றம் கிடைக்கும்.

∆ கருப்பு மற்றும் பச்சை திராட்சை ( விதை உள்ளது மட்டும்) தர்பூசணி இவை அனைத்தும் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி தரக்கூடியவை. அது மட்டுமல்லாமல் சருமத்தின் அழகை மெருகூட்டுவதில் இயற்கை தன்மை கொண்டவை.
குறிப்பு : முகத்தில் தடவும் போது குளிர்ந்த நீரை பயன்படுத்த வேண்டாம்.