30+ வயதிற்கு பின்னர் ஏற்படும் மூட்டு வலி இடுப்பு வலியை புரட்டி போடும் பெஸ்ட் மூலிகை வைத்தியம்!!

Photo of author

By Divya

30+ வயதிற்கு பின்னர் ஏற்படும் மூட்டு வலி இடுப்பு வலியை புரட்டி போடும் பெஸ்ட் மூலிகை வைத்தியம்!!

இன்று பெரும்பாலனோர் மூட்டு வலி,இடுப்பு வலி பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக 30 வயதை கடந்து விட்டால் இந்த பாதிப்பு தானாக ஏற்பட்டு விடும்.இதனால் அன்றாட வேலைகள் கடினமானதாக மாறிவிடும்.எனவே இந்த பாதிப்புகளில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பின்பற்றி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பிரண்டை துண்டு
2)நல்லெண்ணெய்
3)பிரண்டை இலை
4)விளக்கெண்ணெய்
5)தேங்காய் எண்ணெய்
6)கற்பூரம்
7)புளி

செய்முறை:-

ஒரு கப் அளவு பிரண்டை துண்டு மற்றும் பிரண்டை இலை எடுத்து தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.

பிறகு இதை வெயிலில் போட்டு நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 50 மில்லி நல்லெண்ணெய்,50 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் 50 மில்லி விளக்கெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.

அதன் பின்னர் காய வைத்த பிரண்டை துண்டு மற்றும் இலைகளை போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.

அதன் பிறகு பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரம் ஒன்று எடுத்து எண்ணெயில் போடவும்.பிறகு ஒரு துண்டு புளியை பாட்டு மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு காய்ச்சவும்.

பிறகு இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு டப்பாவிற்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

இரவு நேரத்தில் சூடான நீரில் ஒரு காட்டன் துணியை நினைத்து மூட்டு மற்றும் இடுப்பு பகுதியில் ஒத்தடம் கொடுக்கவும்.

பிறகு ஒரு காட்டன் துணி கொண்டு இடுப்பு மற்றும் மூட்டு பகுதியை துடைத்தெடுக்கவும்.அதன் பின்னர் தயாரித்து வைத்துள்ள மூலிகை எண்ணையை இடுப்பு மற்றும் மூட்டு பகுதியில் தடவி மசாஜ் செய்யவும்.இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் அந்த பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் வலி,வீக்கம் முழுமையாக குறைந்து விடும்.