பெரும்பாலான மக்கள் மூல நோயால் அவதியடைந்து வருகின்றனர்.மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதியில் கட்டிகள் உருவாவதை தான் மூலம் அதாவது பைல்ஸ் என்கின்றோம்.இந்த கட்டிகளில் இருந்து சில சமயம் இரத்தம் வரக்கூடும்.
ஒருவருக்கு மலச்சிக்கல் பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்தால் அவை பைல்ஸாக மாறிவிடும்.,மலக்குடலில் தேங்கிய இறுகிய மலம் வெளியேறும் போது ஆசனவாய் பகுதியில் புண்கள் மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.இவை மூல நோயாக மாறிவிடும்.
பைல்ஸ் அறிகுறிகள்:
ஆசனவாய் அரிப்பு மற்றும் வலி
மலத்துடன் இரத்தம் வெளியேறுதல்
கடுமையான மலச்சிக்கல்
மலம் கழிப்பதில் சிரமம்
பைல்ஸ் பிரச்சனைக்கு மருத்துவத்தில் பல சிகிச்சை முறைகள் இருக்கின்றன.ஆனால் அறுவை சிகிச்சை இன்றி பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபட வீட்டு வைத்தியங்களை செய்து பார்க்கவும்.
1)வேப்பம் பூ
2)வேப்ப இலை
ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி வேப்பம் பூ மற்றும் ஒரு கொத்து வேப்பிலை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இதை சிறிது நேரம் ஆறவைத்து குடித்தால் ஆசனவாய் புண்கள்,கட்டிகள் ஆறும்.
1)துளசி இலைகள்
2)தேன்
செரிமானப் பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் சரியாக துளசி இலையை பயன்படுத்தலாம்.இதில் இருக்கின்ற அலர்ஜி பண்புகள் செரிமானக் கோளாறு மற்றும் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு துளசி இலைகள் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் சிறிதளவு தேனை துளசி சாறில் கலந்து குடித்து வந்தால் பைல்ஸ் பாதிப்பு சரியாகும்.