கர்ப்பப்பை கட்டிகள் கரையா சிறந்த டிப்ஸ்! இதனை மட்டும் குடித்தால் போதும்!

Photo of author

By Parthipan K

கர்ப்பப்பை கட்டிகள் கரையா சிறந்த டிப்ஸ்! இதனை மட்டும் குடித்தால் போதும்!

தற்போது சரியான உணவு முறை இல்லாத காரணத்தினாலும் அனைத்து பொருட்களிலும் ரசாயனம் கலந்துள்ள காரணத்தினாலும் அதிக அளவு பெண்களுக்கு எண்ணற்ற பிரச்சனைகள் உருவாகின்றது. அதில் ஒன்றுதான் கர்ப்பப்பை நீர்கட்டி. பெரும்பாலான பெண்களுக்கு இந்த பிரச்சனை இருந்து வருகின்றது. இதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். கர்ப்பப்பையில் கட்டி இருந்தால் சீரற்ற மாதவிடாய் பிரச்சனையும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:
குங்குமப்பூ அதிக ரத்தப்போக்கை தடுக்க பயன்படுகிறது, லவங்கப்பட்டை உடம்பில் உள்ள அழுக்கு மற்றும் கட்டிகளை நீக்க பயன்படுகின்றது, பெருஞ்சீரகம் அதாவது சோம்பு உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி ஜீரணத்தை தூண்டும், கர்ப்பப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை கரைக்க பெரிதளவும் உதவுகிறது. கருஞ்சீரகம் இவை சீரற்ற மாதவிடாய் தடுக்கும். மேலும் கர்ப்பப்பையில் உள்ள நீர் கட்டிகளை கரைத்து புற்றுநோய் வராமல் தடுக்கும்.
செய்முறை:
அரை டீஸ்பூன் கருஞ்சீரகம், அரை டீஸ்பூன் சோம்பு, ஒரு லவங்கப்பட்டை. இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நாம் பொடி செய்து வைத்துள்ளதை சேர்க்க வேண்டும்.

அதனுடன் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதனை மிதமான சூட்டில் வடிகட்டி கால் டம்ளர் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை நாம் வெறும் வயிற்றில் தினந்தோறும் குடித்து வந்தால் கர்ப்பப்பை கட்டிகள் நீங்கும்.