உங்களுக்கு இந்த அறிகுறிகள் காணப்படுகிறதா? அப்படியெனில் உங்களுக்கு இந்த நோய் வரப் போகிறது!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் காணப்படுகிறதா? அப்படியெனில் உங்களுக்கு இந்த நோய் வரப் போகிறது!

இன்றைய காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவு முறை மற்றும் பழக்கத்தினால் ஏராளமான நோய்கள் நம்மிடையே உண்டாகின்றன. நோய்கள் உண்டாக்கும் பொழுது நமக்கு சில அறிகுறிகளை ஏற்படுத்தும். இந்த அறிகுறிகளை கவனத்தில் கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் நோய்க்கான பாதிப்புகளை பாதி அளவு குறைக்கலாம்.

நமது உடலில் எப்படி ஏராளமான உறுப்புகள் உள்ளனவோ! அதே போல் நமக்கு வரும் நோய்களும் ஏராளமான வகைகள் உள்ளன. ஒவ்வொரு நோயும் ஒவ்வொரு விதமான அறிகுறிகளை ஏற்படுத்தும். இவை அவரவரின் உடலமைப்பிற்கு ஏற்றவாறு சிறிது வித்தியாசப்படலாம். உடலில் ஏற்படும் நோய் அறிகுறிகள் அதனால் என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பதை பற்றி பார்ப்போம்.

1. நமக்கு கண்கள் தொடர்ந்து அறிந்து கொண்டிருக்குமானால் ஜலதோஷம் வரப்போகிறது என்று அர்த்தம்.

2. காதுகளில் அதீத குடைச்சல் மற்றும் அதிக வலி வந்தால் நமக்கு காய்ச்சல் வரப்போகிறது என்று அர்த்தம்.

3. அதிக பசி தொடர்ந்து எடுக்குமானால் நமக்கு இன்சுலின் அளவு குறைந்து விட்டது எனவும் இது நீரிழிவு நோய்க்கான அறிகுறி என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

4. பாதங்களில் அதிக வெடிப்பு ஏற்பட்டு இருந்தால் பித்த அளவு அதிகரித்து உடல் அதிக சூடாக உள்ளது என்பதை அறியலாம்.

5. கால்களின் மணிக்கட்டுகள் தொடர்ந்து வலித்துக் கொண்டிருந்தால் நமது உடல் எடை கூடி விட்டதாக அர்த்தம்.

6. கைவிரல் நகங்களில் மெல்லிய கருப்பு கோடுகள் அடுத்தடுத்து விழுமானால் இதயத்தில் பிரச்சனை ஆரம்பிக்கிறது கவனம் கொள்ளவும் என அர்த்தம்.

இவை பொதுவான அறிகுறிகள் தான். இவை மட்டுமல்லாமல் வேறு சில நோய்களுக்கு வெவ்வேறான அறிகுறிகளும் ஏற்பட்டு அந்த நோய் நமக்கு ஆரம்பிக்கப் போகிறது என எச்சரிக்கை விடுக்கிறது. அதற்கு ஏற்றார் போல் நாம் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.