குளிர்காலத்தில் சிறியவர்கள்,பெரியவர்கள் அனைவரும் அனைவரும் எதிர்கொள்ளக் கூடிய ஒரு பொதுவான பிரச்சனை சளி தொந்தரவு.இந்த பாதிப்பில் இருந்து மீள நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த வைத்தியத்தை முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
துளசி,வெற்றிலை,ஓமவல்லி,தூதுவளை போன்றவை சளியை குணப்படுத்தும் மூலிகைகளாகும்.இதில் கஷாயம்,டீ செய்து பருகி வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும்.அதேபோல் துளசி,வெற்றிலையை வைத்து சளியை குணமாக்கும் மாத்திரை தயார் செய்வது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)வெற்றிலை – ஒன்று
2)துளசி – 10
3)மிளகு – ஐந்து
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.பிறகு துளசி இலையை பறித்து சுத்தம் செய்து வைக்க வேண்டும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு சுத்துவிட வேண்டும்.அடுத்து கருப்பு மிளகை அதில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வெற்றிலை கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
தீராத சளி இருப்பவர்கள் வெற்றிலை மாத்திரை தினமும் மூன்றுவேளை சாப்பிட வேண்டும்.வெற்றிலை மாத்திரை சாப்பிட்ட பிறகு வெது வெதுப்பான நீரை பருக வேண்டும்.
சளி தொந்தரவு குறைவாக இருப்பவர்கள் இந்த வெற்றிலை மாத்திரை சாப்பிட்டால் ஒரே நாளில் அவற்றிற்கு நிவாரணம் கிடைத்துவிடும்.மாத்திரையாக எடுத்துக் கொள்ள விரும்பாதவர்கள் வெற்றிலையை வைத்து கஷாயம் அல்லது தேநீர் செய்து பருகலாம்.மூலிகை இலைகளை கொண்டு தேநீர் செய்து பருகி வந்தால் சளி தொந்தரவு கட்டுப்படும்.