நவம்பர் 3ம் தேதி ரசிகர்களுக்கு செம்ம டிரீட்! முக்கிய அப்டேட்டை வெளியிட்ட இந்தியன்2 படக்குழு!!

Photo of author

By Sakthi

நவம்பர் 3ம் தேதி ரசிகர்களுக்கு செம்ம டிரீட்! முக்கிய அப்டேட்டை வெளியிட்ட இந்தியன்2 படக்குழு!!

Sakthi

நவம்பர் 3ம் தேதி ரசிகர்களுக்கு செம்ம டிரீட்! முக்கிய அப்டேட்டை வெளியிட்ட இந்தியன்2 படக்குழு!!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ நவம்பர் 3ம் தேதி வெளியாகும் என்று படக்குழு இன்று(அக்டோபர்29) அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக இந்தியன் 2 திரைப்படம் தற்பொழுது உருவாகி இருக்கின்றது.

இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தியன் 2 திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரண் அவர்கள் தயாரிக்கின்றார். மேலும் இசையமைப்பாளர் அனிருத் இந்தியன் 2 திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். இந்தியன் 2 திரைப்படம் 2024ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 29ம் தேதி இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கியமான அப்டேட் வெளியாகும் என்று நேற்று(அக்டோபர் 28) அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் இன்று(அக்டோபர்29) காலை 11 மணிக்கு இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கியமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியன் 2 திரைப்படத்தின் க்லிம்ப்ஸ் வீடியோ நவம்பர் 3ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக படக்குழு புதிய பாஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதில் இந்தியன் 2 ஆன் இன்ட்ரோ என்று குறிப்பிட்டு கீழே 03.11.2023 என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்தியன் 2 கிலிம்ப்ஸ் வீடியோவை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.