பொதுவெளியில் வெறிச்செயல்…பெண்ணின் உடல் உறுப்புகளை சிதைத்த ஆண் தலைமறைவு !

Photo of author

By Savitha

பீஹார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பைரபன்டி சந்தையில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபகாலமாக பெண்கள் கொடூர தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படும் அவலம் அரங்கேறி வருகிறது, இதுபோன்ற அவலங்களை வைத்து பார்க்கும்போது பெண்கள் சுதந்திரம் அடைந்துவிட்டாள் என்று கூறுவதெல்லாம் வெறும் கட்டுக்கதையாகவே தெரிகிறது. கடந்த சனிக்கிழமையன்று பீஹார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பைரபன்டி சந்தையில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சந்தைக்கு சென்ற அந்த பெண்ணை முகமது ஷகீல் என்னும் நபர் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது, அவர் ஒரு பானைக்குள் கூர்மையான கத்தியை மறைத்து வைத்து இருக்கிறார். தக்க சமயம் பார்த்து அவர் அந்த ஆயுதத்தை வைத்து அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.

ஷகீல், அந்த பெண்ணின் மார்பு பகுதி, கைகள், கால்கள் மற்றும் காதுகள் என உடல் உறுப்புகளை வெட்டி சிதைத்திருக்கிறார், எதிர்பாராத இந்த கொடூர தாக்குதலுக்கு ஆளான அந்த பெண் மயங்கி கீழே சரிந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். மேலும் ஷகீல் அந்த பெண்ணை சிதைத்துவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பியோடிவிட்டார், அந்த பெண் அப்பகுதி மக்களுக்கு நன்கு பழக்கமானவர் என்பதால் உடனே அப்பகுதி மக்கள் அப்பெண்ணின் கணவர் அசோக் யாதவ் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு அப்பெண்ணை சிகிச்சைக்காக மாயாகஞ்ச் பகுதியிலுள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர், அப்போது உயிரிழந்த அந்த பெண் தன்னை சிதைத்தவர் முகமது ஷகீல் என்று அடையாள காட்டியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். விசாரணையின் அடிப்படையில் போலீசார் சந்தேகத்திற்குரிய ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ஆனால் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட முகமது ஷகீல் தலைமறைவாக இருக்கிறார் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.