சகாப்தம் சுட்டு கொல்லப்பட்ட பின்னனி! தனது இறப்பை முன்கூட்டியே அறிந்த இந்திராகாந்தி!
1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி காலை 9 முதல் 10 மணிக்குள் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த செய்தி நாடு முழுவதும் உள்ள மக்களை உருக்குலைத்தது. பத்து ஆண்டுகள் இவரிடம் நம்பிக்கை மிகுந்த பணிபுரிந்து வந்த பாதுகாவலர் ஆலய இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் சுட்டுக் கொல்லப்பட்டதின் பின்னணி தான் என்ன?
இரும்பு பெண்மணியாக திகழ்ந்த இந்திரா காந்தி, தனது சொந்த நாட்டின் பாதுகாவலராளையே கொலை செய்யப்பட்டது மிகவும் வருத்தத்திற்குரியது. இதற்கு பின்னால் மிகப்பெரிய தீவிரவாத அமைப்பு இருந்தது மட்டுமே இதற்கான காரணம்.
காலிஸ்தான்:
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே சீக்கியர்கள் ஒரு முக்கிய கோரிக்கையை வைத்து வந்தனர். அது என்னவென்றால் சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் இந்துக்களுக்கு இந்தியா என்ற நிலையை கூறி வந்தனர். குறிப்பாக பஞ்சாபில் அதிகப்படியான சீக்கியர்கள் வசித்து வந்தனர். அவர்களையும் பாகிஸ்தானுடன் இணைத்து காலிஸ்தான் என்ற ஒரு தனி நாட்டை கொண்டு வருவதை வலியுறுத்தி கூறி வந்தனர்.
இதனையடுத்து நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்த பிறகு 1965 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் போர் நடைபெற்றது.அப்போதிருந்த மத்திய அரசு, சீக்கியர்கள் வசித்து வந்த பகுதிகளை இணைத்து பஞ்சாப் என்ற தனி மாநிலமாக அறிவித்தது. ஆனால் இவர்கள் தனி நாடு வேண்டும் என கேட்டு வந்த நிலையில் தனி மாநிலம் அமைத்துக் கொடுத்தது இவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.
காலிஸ்தான் வலியுறுத்தி போர்:
1980 ஆம் ஆண்டு ஜெகதீஸ் சிங் என்பவர் சோனியாகாந்த இடம் காலிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்தார். ஆனால் அந்த கோரிக்கையை இந்திரா காந்தி புறக்கணித்து விட்டார். இதனால் அங்கிருந்த சீக்கியர்கள் ஆங்காங்கே சிறு சிறு யுத்தத்தை தொடங்க ஆரம்பித்தனர். இதனைக் கண்ட பஞ்சாப் மக்கள் இந்திரா காந்தி இதனை நடக்க விட்டு வேடிக்கை பார்க்கிறார் என்று விமர்சனம் செய்து வந்தனர்.
இவ்வாறு இருந்த நிலையில் உச்சகட்டத்தை அடையும் நிலையில் காலிஸ்தான் நாட்டை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு பெரிய யுத்தமே உருவானது. இந்த இயக்கங்களின் தலைவராக ஜெர்னலைஸ் சிங் என்பவர் இருந்தார். இவருக்கென்று ஒரு தனி தீவிரவாத படையையே வைத்திருந்தார். இவருக்கு பக்க பலமாக நமது இந்திய படைகளின் வீரர் ஒருவரும் உறுதுணையாக இருந்தார்.
பங்களாதேஷ் போரில் மத்திய அரசால் பாராட்டு பெற்ற விந்திரன், ஒரு சில ஊழல் வழக்கால் ராணுவத்தை விட்டு நீக்கப்பட்டார். மத்திய அரசை பழிவாங்கும் எண்ணத்தில் உடனடியாக இவர் தீவிரவாதி இயக்க தலைவரான ஜெனலைசிங் என்பவர் உடன் கைகோர்த்தார்.
பொற்கோயில் தாக்குதல்:
இதனை அடுத்து ஜர்னலிஸ்ட் சிங் தனது ஆதரவாளர்களுடன் பொற்கோவிலில் தஞ்சம் அடைந்தார். அந்த சூழலில் பஞ்சாப் முழுவதும் கலவர பூமியாகவே காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை சம்பவமாகவே அரங்கேறியது. இந்நிலையில் இவர்களுடன் இந்திரா காந்தி பேச்சுவார்த்தை செய்ய முன்வந்தார். ஆனால் அது எதுவும் பயனளிக்கவில்லை. இதையடுத்து இந்த உச்சகட்ட யுத்தத்திற்கு காரணம், உயர்தர காவல் அதிகாரி இந்த தீவீரவாத கையில் சிக்கி கொலை செய்யப்பட்டது தான்.இதனை தடுக்க இந்திரா காந்தி யாருக்கும் தெரியாமல் ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தினார்.
ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் திட்டம்:
மத்திய அரசின் சில நபர்களுக்கு மட்டுமே தெரிந்த ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் திட்டத்தை செயல்படுத்த இந்திரா காந்தி முன் வந்தார். ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் திட்டம் என்னவென்றால் பொற்கோவிலை தாக்கி அங்குள்ள தீவிரவாதிகளை அளித்து பிடிப்பது என்பதுதான்.இதன் பின் விளைவுகளை அறிந்து இந்திரா காந்தி இந்த முடிவை எடுத்தார்.
அதன் பேரில் பல ராணுவ வீரர்கள் களமிறங்கி பொற்கோவிலை தாக்கினர். ராணுவ வீரர்களுக்கு இணையாக அங்கு இருந்த தீவிரவாத அமைப்பும் இவர்களை தாக்கியது. இறுதியில் அந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் ஜர்னலிசின் சிங் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். மக்களின் அமைதிக்காக பல ஆயிரக்கணக்கான உயிர்கள் இந்த போரில் இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திரா காந்தியின் கணிப்பு:
சீக்கியர்களின் பொற்கோவிலை தாக்கிய பிறகு தன்னை இவர்கள் விடப்போவதில்லை என்பதை இந்திரா காந்தி முன்கூட்டியே அறிந்திருந்தார். இதைப் பற்றி தனது மகன் ராஜீவ் காந்தி மற்றும் மருமகள் சோனியா காந்தி இடமும் தெரிவித்து இருந்தார். அவர்களிடம் மட்டுமின்றி தனது நெருங்கிய தோழியிடமும் இது பற்றி கூறியிருந்தார். சீக்கியர்கள் பொற்கோவில் தாக்கியதாலும்,இதர காரணங்களாலும் உச்சகட்ட கோபத்தில் இந்திரா காந்தி மேல் இருந்தனர்.
எங்கே இந்த கோபத்தால் எனது பேரப்பிள்ளைகளை ஏதேனும் செய்து விடுவார்களோ என்று எண்ணி விடுதியில் படித்துக் கொண்டு இருப்பவர்களையும் அழைத்து வீட்டிலேயே படிக்க கூறினார். இவர் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் இவரது பேரப்பிள்ளைகள் சென்று கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளானது. ஒடிசாவில் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த இவருக்கு இந்த தகவல் அறிந்ததும் உடனடியாக டெல்லி வந்தார்.
இவருக்கு நாள் கடக்க கடக்க பயமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இருப்பினும் அனைத்தும் இந்திய மக்களுக்காக தான், எனது இறுதி மூச்சு வரை இந்திய மக்களுக்கு சேவை செய்வேன் என்பதையும் அந்த ஒடிசா பிரச்சாரத்தில் மனம் உருக பேசியுள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்ட இந்திரா:
1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வழக்கம் போல் அலுவலக வேலைகளை பார்க்க இந்திரா கிளம்பி கொண்டிருந்தார். அந்த வேலையில் இவருக்கு பத்து ஆண்டுகள் பாதுகாவலராக இருந்து வந்த மற்றும் இவரிடத்தில் நற்பெயர் பெற்ற பியான் சிங் என்பவராளே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை அடுத்து சத்துவந் சிங் என்பவரும், தான் வைத்திருந்த துப்பாக்கியால் மீண்டும் இந்திரா காந்தியை சுட்டு வீழ்த்தினார்.
சத்தம் கேட்ட இதர பாதுகாவலர்கள் பியான்சிங்கை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். மற்றொருவரை பலத்த காயங்களுடன் பிடித்தனர். தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இந்திரா காந்தியை அவரது மருமகள் சோனியா காந்தி மடியில் ஏந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இந்திரா காந்தி இறந்தது குறித்து ஆல் இந்திய ரேடியோவில் மாலை ஆறு மணிக்கு மக்களுக்கு தெரிவித்தனர். நாடு முழுவதும் அடுத்தடுத்து ஆங்காங்கே போர்க்களமாகவே காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.இவரது இறப்பை யாராலும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.